சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் 'துளிர்கள் நிகழ்வு' சாய்ந்தமருது பேல்ஸ் வரவேற்பு மணடபத்தில் இடம்பெற்றது.
பெற்றோர்களின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் நஸ்மியா சனூஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம், பிரதி அதிபர்களான எம்.எஸ்.எம்.ஆரிப், குறைஸியா ராபிக், பகுதித் தலைவர் எம்.ஏ.சீ.எல்.நஜீம், ஓய்வுபெற்ற முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜப்பார், ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் ஏ. கரீம், விழாக்குழச் செயலாளர் எம்.நளீம் உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் இவ்வருடம் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்களுக்கும் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ், நினைவுச் சின்னம் என்பன அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.