நுவரெலியா, வலப்பனை – மலபட்டாவ மற்றும் இலுப்பத்தன ஆகிய பிரதேசங்களில் 20.12.2019 அன்று ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 45 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இவர்கள் தற்காலிகமாக இலுப்பத்தன பிரதேச கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்ட போதிலும், தற்போது அனர்த்தங்கள் இடம்பெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவித்துள்ளனர். மக்கள் தமது இருப்பிடங்களை நோக்கி செல்கின்ற பொழுதிலும், மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடும் என அச்சதுடனையே இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட இவர்களுக்கான நிவாரண உதவிகளை வலப்பனை பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.