தோப்பூர் மக்களின் 1000 ஏக்கர் காணி சேருவில ரஜ மஹா விகாரைக்காக அளவீடு ஆரம்பம்

தோப்பூர் செல்வ நகர் நீனாக்கேணி பிரதேச மக்களுக்கு சொந்தமான 1000 ஏக்கர் சேருவில ரஜ மஹா விகாரைக்காக அளவீடு ஆரம்பம் - முழு விபரம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்

சேருவில பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தோப்பூர் நீனக்கேணி பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான குறித்த பிரதேசத்தில் 128 குடும்பங்களுக்கு சொந்தமான 47 ஏக்கர் காணிகள் ஏற்கனவே புவிசரிதவியல் திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட்ட நிலையில் அதற்க்கு மேலதிகமாக சுமார் 1000 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் புனித பூமி திட்டத்தின் கீழ் 1000 ஏக்கர் அளவீடுகள் இன்று (26) வியாழன் திருகோணமலை மாவட்ட நில அளவீட்டு அளவையாளர்களால் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன

தற்பொழுது அளவீடு நடைபெறும் பகுதிக்குள் பிரதேச முஸ்லிம்களின் காணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் 1915.டிசம்பர் 21 ம் திகதி உறுதி பத்திரம் அதற்கான வரலாறு (சின்னக்கர் ஒப்பம் )போன்றன வழக்கப்பட்டுள்ள நிலையிலும் சுமார் 350 தொடக்கம் 400 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளன அவர்களுடைய வாழ்வாதாரம் எதிர்கால இருப்புகள் கேள்வி குறியாகியுள்ளது

இந்நிலையில் சேருவில பிரதேச செயலாளரால் 2019.07.19 திகதி மாவட்ட நில அளவை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் சேருவில விகாராதிபதி விகாரையை சுற்றியுள்ள 1000 ஏக்கர் காணியை அளவீடு செய்து எல்லை கல்லிட்டு தருமாறும் ,மேலும் 2014/11/.23 மற்றும் 2014/12/23 நில அளவை வேண்டுகோளுக்கு அமைவாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இது விடயமாக ஏற்கனவே 2015.07.26 அளவீட்டை நிறுத்தும்படி சேருவில பிரதேச செயலாளரால் ஏற்கனவே 2015 கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது அதே போன்று 17 மே மாதம் 2017 கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற நினக்கேணி காணி தொடர்பான விசேட கூட்டம் ஆளுனர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் தெளபீக்,இம்றான் மஹ்ரூப்,அரசங்க அதிபர், முப்படை தளபதிகள், சேருவில பெளத்த குருமார்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

17 மே 2017 தோப்பூர் செல்வநகர் பிரதேசத்தில் பதற்றம் தளத்தில் மாகாண சபை உறுப்பினர் அன்வர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் விஜயம் 

தோப்பூர் செல்வநகர் நீனாகேணி சேருவில பகுதியில் நீனாக் கேணி பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையினூடாக வந்த காடையர்கள் செல்வநகர் பிரதேசத்தில் இருந்த சில முஸ்லிம் மக்கள் பகுதிக்குள் சென்று அடாவடித்தனம் செய்த வேளையில் அப்பகுதி மக்கள் சிலர் செல்வநகர் பள்ளிவாசலை நோக்கி இடம்பெயர்ந்த நிலையில் குறித்த பகுதிக்கு 16.05.2017 மாலை 7.30 மணியளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பதற்ற நிலையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக அன்வர் மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியினூடாக உரையாடி பாதுகாப்பை பலப்படுத்த கேட்டதுடன் அதே வேளை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் நிலைமைகளை விபரித்ததுடன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதற்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் பட்டாளங்கள் பாதுகாப்பிற்க்காக குவிக்கப்பட்ட நிலையில் நாளை 17.05.2017 காலை 9.00 மணியளவில் ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையில் இரண்டு சமூகத்தை சார்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் பௌத்த குரு பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பங்குபற்றுதலோடு குறித்த பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியில் பௌத்த குருவினால் டோசர் இயந்திரம் பாவித்து காணிகள் தள்ளப்பட்டபோது 15.05.2017 காணி சொந்தக்காரர் மற்றும் பிரதேச மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டு பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

18 மே 2017 கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம்:

கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இங்கு இரண்டு சாரர்களினாலும், உயர் அதிகாரிகாளிடத்திலும் விரிவான விளக்கம் கோரப்பட்டதை தொடர்ந்து குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்தினுடையது என 1975, 2013ஆம் ஆண்டும் வர்த்தகமாணி அறிவித்தலினால் குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்தினுடையது என அறிவிக்கப்பட்டது. 

அச்சந்தர்ப்பத்தில் இருந்த குறித்த இடத்தில் 44 வீடுகள் கடந்த 15வருடமாக அமைக்கப்பட்டிருந்ததாலும், வாக்காளர் அட்டையில் அவர்களின் இடம் குறிக்கப்பட்டதாலும் குறித்த இடத்தில் எவ்விதமான வீடுகளும் அகற்றப்பட மட்டாது எனவும் மேலதிக கட்டுமானப்பணிகளும் இடம்பெற முடியாது எனவும் அவ்வாறு மேலதிக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இருந்தால் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெறவேண்டும். எனவும் ஆளுநரினால் இங்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத்தொடந்து குறித்த பகுதியில் உள்ள வனபரிபாலன திணைக்களத்தினுடையது என அறிவிக்கப்பட்ட இடத்தில் தோட்ட காணிகள் உள்ளதால் அங்கு எவ்வித நடவடிக்கைகளும் அங்குள்ள மக்களினால் இடம்பெற முடியுமா என கேள்வி எழுந்ததை தொடர்ந்து குறித்த இடத்தில் மக்களினால் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளலாமா என சரியான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். கிழக்கு மாகாண அரசங்க அதிபர் தலைமையில் மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாள ஆகியோர் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனார்.

மேலும், இதனை தொடர்ந்து அங்கு இரு சாரர்களிடத்திலும் பரஸ்பர ஒற்றுமையுடன் பிரச்சினைக்கு அவ்விடத்தில் தீர்வு எட்டப்பட்டடு சமாதனத்துடன் குறித்த பதற்றத்திற்கு சாதகமான தீர்வு எட்டப்பட்டது.

17 மே 2017 முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் தலைமையில் விசேட கூட்டம்

தோப்பூர் செல்வநகர் நீனாகேணி பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹம்மத்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் லாஹிர் ஆகியோர் செல்வநகர் பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக செல்வ நகர் ஹுதா ஜும்மா பள்ளிவாசலில் (18) வியாழன் காலை 8 மணியளவில் விசேட கலந்துரையாடல் பிரதேச பொது மக்களுக்குமிடையில் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹம்மத் அவர்களின் சொந்த நிதியில் இருந்து ரூபா 100,000/- நிதி வழங்கியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து நிதி பெற்று தரப்படும் எனவும் தெரிவித்தார்.

18 மே 2017 தோப்பூர் செல்வநகர் நீனாகேணி அல் ஹுதா பள்ளிவாசல் நிர்வாகிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வருடன் சந்திப்பு:

தோப்பூர் செல்வநகர் நீனாகேணி அல் ஹுதா பள்ளிவாசல் நிர்வாகிகள் 18 (வியாழன்) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களை சந்தித்து பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டது.

05 ஜூன் 2017 தோப்பூர் செல்வநகர் நீ நாகேணி காணி விடயமாக ஆளுனர் தலைமையில் விசேட கலந்துரையாடல்:

தோப்பூர் செல்வநகர் நீநாகேணி காணி பிரச்சினை தொடர்பான இரண்டாவது விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் 05.06.2017 (திங்கள்) பி.ப.2.00 மணியளவில் ஆளுனர் அலுவலக்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே,பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ்.தௌபீக்,அப்துல்லாஹ் மஹ்ரூப்,அமைச்சர் ஆரியவதி ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,மாகாண சபை உறுப்பினர் அருண ,மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார,செருவில பிரதேச செயலாளர்,நில அளவை திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி,தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள்,வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள்,மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,இராணுவப்படை தளபதி,பௌத்த குருமார்கள்,பள்ளிவாசல் தலைவர் உள்ளிட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்

12 ஜூன் 2017 விசேட கூட்டம் முன்னாள் முதல் அமைச்சர் நசீர் அஹம்மத் தலைமையில் :

தோப்பூர் செல்வநகர் நீனாகேணி பிரதேசத்தில் வசிக்கும் பிரதேச முஸ்லிம்களின் காணியில் அண்மைகாலமாமாக ஏற்பட்டுவரும் பிரச்சினை தொடர்பில் 12 (திங்கள்) பி.ப. 3 மணியளவில் செல்வநகர் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அரசாங்க அதிபர் புஸ்பகுமார மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,லாஹிர்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர் நிஸ்மி , பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்

இதன்போது அரசாங்க அதிபர் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் எவரும் அகற்றப்படமாட்டார்கள் என்பதுடன் குறித்த 49 ஏக்கர் காணிக்குள் உள்ள 44 நிரந்தர வீடுகளுக்கும் எந்த வித பிரச்சினைகளும் கிடையாது குறிப்பிட்ட 4 வகைகளின் கீழ் வசிப்பவர்களுக்கான அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

01. புதைபொருள் பிரதேசம் மற்றும் நில அளவை மேற்கொள்ளல்
02. 44 நிரந்திர வசிப்பாளர்களை எல்லைப்படுத்தல்
03. பிரதேச செயலாளரால் அளவுகள் குறிக்கப்பட்ட கடிதம் வழங்கி வைக்கப்படும்
04. உரியவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்


அவ்வாறு இருக்கும்போது (26) வியாழன் மேலதிகமாக ஆயிரம் ஏக்கர் காணி அளவிட்டு அதற்க்குள் வசிப்பவர்கள் காணி சொந்தகாகர்கள் குறித்த பௌத்த விகாரைக்கு வரி செலுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

ஏற்கனவே பல முறை அளவீடு மேற்கொள்ள முற்பட்ட போதெல்லாம் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் அவை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -