சேருவில பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தோப்பூர் செல்வநகர் நீனாகேணி 1000 ஏக்கர் முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் சிரேஷ்ட சட்டதரணி முஜீப் அவர்களின் தலைமையில் குறித்த பிரதேச காணி உரிமையாளர்களுடன் தோப்பூர் செல்வநகர் ஜும்மா பள்ளிவாசலில் இநேற்று (27) வெள்ளி காலை சிரேஷ்ட சட்டத்தரணி முஜீப் மூலமாக சட்ட ஆலோசனை பெறப்பட்டதுடன் எதிர்காலத்தில் காணிகளை மீள பெற எடுக்கவேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது
கலைத்துறையாடலில் பள்ளிவாசல் நிர்வாகம்,விவசாய சம்மேளனம்,கிராமிய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், வட்டார அமைப்பாளர் தாஜ்மீன்,மீனவ சங்க தலைவர் இர்பான் மற்றும் முன்னாள் சேருவில பிரதேச சபை தவிசாளர் பௌஸ் உள்ளிட்ட காணி உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.