கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக
நாவிதன்வெளி 2 , 15ம் கிராமத்தை ஊடறுத்து செல்லும் பிரதான வாய்க்கால் (3ம் வாய்க்கால்) லின் பிரதான பாதை தடைப்பட்டுள்ளது.
(20-12-2019) இரவு பெய்த கனத்த மழையினூடாக பெருக்கெடுத்த வெள்ளத்தின் காரணமாக பிரதான் பாதை உடைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறிப்பிட்ட நாவிதன்வெளி 2, அன்னமலை 2 கிராமசேவகர் பிரிவுக்குட்ட மக்களின் போக்குவரத்தானது தடைப்பட்டுள்ளது.
இப்பிரதேச மக்கள் அண்மைக் கிராமத்துக்கோ, வயல்வெளிகளுக்கு செல்ல முடியாதவாறு அனைத்துப் பாதைகளும் தடைப்பட்டுள்ளது. வேப்பையடி-தம்பலவத்தைப் பாலம், இலுப்பைக்குளம்(மத்தியமுகாம்6) 15ம் கிராம பாதை, 15ம் கிராமம் அன்னமலை பிரதான பாதைகள் அனைத்தும் நீர் பாய்ந்தோடுவதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்குகின்றார்கள்.