எம்.என்.எம்.அப்ராஸ்-15 வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு" நிலையான அபிவிருத்தி மூலம் அனர்த்தத்திக்கு தாக்கு பிடிக்ககூடிய சமுகத்தை உருவாக்குதல் "எனும் தொனிப்பொருளில் தேசிய சுனாமி நினைவு தினம் சாய்ந்தமருதில்
அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் (26)இடம்பெற்றது.
இதற்கமைய சாய்ந்தமருது பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பித்த பேரணி சாய்ந்தமருது வைத்தியசாலை வரை இடம்பெற்றது. இது தொடர்பான
நிகழ்வுகள் சாய்ந்தமருது லீ மெடிரியன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது சுனாமி ஆழிப்பேரலை பேரலை அனர்த்ததினால் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சாய்ந்தமருது ஆதார வைத்தியசாலையில் மரக்கண்டு நடப்பட்டது.
இதன் போது அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவி ஸ்ரீயாணி விஜயவிக்ரம ,பாரளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.ஏ.பண்டாரநாயக்க ,முப்படை
அதிகாரிகள் ,திணைக்கள தலைவர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -