ஜனவரி 2 இல் பாட நூல்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை...

ஐ. ஏ. காதிர் கான்-

னவரி 2 ஆம் திகதி முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினமே மாணவர்களுக்கு பாட நூல்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இவ்வருடத்தின் இறுதி மாதத்தில் மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும்போதே பாட நூல்களை வழங்குவதற்குத் தீர்மானித்திருந்த போதும், சில நூல்கள் குறைபாடுகளாக இருந்தமையால், அடுத்துவரும் பாடசாலை முதல் நாளிலிலேயே அதனை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கிணங்க, ஜனவரி 2 ஆம் திகதி பாட நூல்களைப் பெற்றுக்கொடுப்பதாகவும், அதற்கான பணிப்புரைகளை வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாட நூல்கள் தொடர்பில் ஏதாவது விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர்
011 2784815
என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும், கல்வியமைச்சின் வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -