எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படுகின்ற அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மூடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.குறித்த உத்தரவானது இம்மாதம் 1ம் திகதி முதல் 20 ம் திகதி வரை குறித்த பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனங்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. அதனை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் எமது தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட்டார்கள் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என்று தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றுக்கு இன்று திங்கட்கிழமை (9) திடீர் விஜயத்தை மேற்கொண்ட தவிசாளர் கல்வி நிறுவனங்களை பார்வையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.