01. சாக்கடை கழிவு நீர் அகற்றல் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிராந்தியத்தின் துரிதமான செயற்பாடுகளுக்கான கற்றல் செயலமர்வு
தெற்காசிய பிராந்திய நாடுகள் சாக்கடை கழிவு நீர் அகற்றல் தொடர்பில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒவ்வொருவரும் நடைமுறைப் பாடத்தை கற்றுக்கொள்ளல், உயர்தர பாடங்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் நடைமுறை தொடர்பில் அடையாளம் காணுதல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு சாக்கடை கழிவு நீர் அகற்றல் தொடர்பான தெற்காசிய மகாநாடு (சகோசன்) மகாநாடான சாக்கடை கழிவு நீர் அகற்றலுக்கான பிராந்திய மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 'சாக்கடை கழிவு நீர் அகற்றல் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிராந்திய துரித செயற்பாட்டை கற்றுக்கொள்ளல்' என்ற செயலமர்வு அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான விடயம் தொடர்பான தொழில் துறையினர், இலங்கை அரச துறைக்கான அதிகாரிகள் மற்றும் உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையில் இலங்கையில் நடத்துவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டிருப்பதாக கௌரவ பிரதமர் மற்றும் நகர அபிவிருத்தி நீர் விநியோகம் மற்றும் விடமைப்பு வசதி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.
02. இலங்கையின் அனைத்து ஆசிரியர் சபை உழியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்காக தேசிய கல்வியற்கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மேம்படுத்துதல்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 'சுபீட்ச தொலைநோக்கு' என்ற கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட ஞானத்தைக்கொண்ட பிரஜை, அறிவைக் கொண்ட சமூகம் ஒன்றுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களின் தொழில் தரத்தை மேம்படுத்துவதற்காக, இலங்கையில் அனைத்து ஆசிரியர் சமூகத்தையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தேசிய கல்வியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பிடங்களாக தரம் உயர்த்தி ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு தகுதியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்விசார் மற்றும் உடனடி பணிகளை நிறைவேற்றுவதற்காக கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விசேட குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. பிவிதுரு லங்கா யாத்திக்க பரிசற கலமனாகறன வெடசடஹன – என்ற தூய்மையான இலங்கை தேசிய சுற்றாடல் முகாமைத்துவ வேலைத்திட்டம்
சுற்றாடல் முகாமைத்துவத்தின் பொறுப்பு தொடர்பாக பொது மக்களின் அறிவை மேம்படுத்தி அதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதைப் போன்று உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்ட ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரின் நேரடி பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக கழிவுப் பொருட்களை வகைப்படுத்துவதற்கான மத்திய நிலையம் ஒன்றை அமைத்தல், தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற நிறுவனத்திடம் கழிவுப்பொருள் எரி தொட்டி (Incinerators) வழங்குதல், கலப்பு உரத் தொட்டியை மேம்படுத்துதல் மற்றும் கலப்பு உர சுற்று வட்ட கைப்பொறியை புதியதாக ஸ்தாபிப்பதற்கு தேவையான வசதிகளைச் செய்தல், சுற்றாடல் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நாட்டின் மொத்த சுற்றாடல் முகாமைத்துவத்திற்கான வேலைத்திட்டம் மற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்காக 'பிவிதுரு லங்கா யாத்திக்க பரிசற கலமனாகறன வெடசடஹன' என்ற தூய்மையான இலங்கை தேசிய சுற்றாடல் வேலைத்திட்டத்தை துரிதமாக முன்னெடுப்பதற்காக சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வள அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. கல்வி சேவையை (Closed) மூடிய சேவையாக அமைத்தல்.
தொழில் சேவைப் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்தல், சேவைகளை பாராட்டுவதற்கான முறை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றுதல், தொழில் தன்மையை மேம்படுத்துதல், சேவை திருப்தியின் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த செயல்திறன் மிக்க சேவையை வழங்கக்கூடிய வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர் கல்வித் துறையைச் சார்ந்தோர் மற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கல்வி மூடிய சேவை ஒன்றை ஸ்தாபிக்கும் முக்கியத்துவம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விடயங்களை மதிப்பீடு செய்து ஆலோசனை ஒன்றைத் தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் விடயத்துடன் தொடர்புபட்ட நீடித்த அனுபவம் மிக்க புத்திஜீவிகளுடனான குழு ஒன்றை நியமிப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்ளை நியமித்தல்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் 44 (1) கீழ் புதிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பு - நாட்டை முன்னெடுக்கும் சுபீட்சம் மிக்க தொலைநோக்கு
பயனுள்ள பிரஜை, மகிழ்ச்சியுடன் வாழும் குடும்பம், பண்புகளை மதித்து ஒழுக்கத்தை மதிக்கும் நீதியான சமூகம் மற்றும் சுபீட்சம் மிக்க நாடு என்ற சுதுர் விதோயம் என்ற நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக 10 கட்டளைகளைக் கொண்ட வேலைத்திட்டம் ஒன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாட்டை மேம்படுத்துவதற்கான சுபீட்சம் மிக்க தொலை நோக்கு, தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்வதற்கும், அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களினால் அவர்களின் பணிகளுக்கு அமைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. உள்ளுர் கைத் தொழில் மற்றும் நிர்மாண தொழில் துறைக்கு தேவையான மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்கு உள்ள அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் தேவையை நீக்குதல்.
மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவையின் காரணமாக உள்ளுர் தொழில்துறைகளைப் போன்று நிர்மாண தொழில்துறைக்கும் தேவையான மூலப்பொருட்களை விநியோகிப்பதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக அமைச்சரவை அங்கத்தவர்கள் பலரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவை உடனடியாக அமுலுக்கு வருவதை நீக்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.