2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்


2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுதல்

தேசிய பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கற்கை நெறி நடத்தப்படுவதற்காக இலங்கையில் தேசிய பாதுகாப்பு கல்லூரி இல்லாமையின் காரணமாக முப்படை அதிகாரிகள் இவ்வாறான கற்கை நெறி நடத்தப்படும் சீனா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பாதுகாப்பு கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த நாடுகளின் வருடாந்தம் கிடைக்கும் கற்கை நெறிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதனால் எதிர்பார்த்த வகையில் அதிகாரிகளை பயிற்றுவிக்க முடியாது உள்ளது. இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு கல்லூரி ஒன்றை அமைப்பதற்காக தற்பொழுது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு அமைவாக தேசிய பாதுகாப்பு கல்லூரி ஒன்றை ஸ்தாபிப்பதற்கு சம்பந்தப்பட்ட சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கு மகாவலி விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்களும் சமர்;ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவரை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கும், செக் ஜனநாயக குடியரசிற்கும் இடையில் ஒப்படைப்பதற்காக ஏற்படுத்திக்கொள்வதற்கான உத்தேச உடன்படிக்கை.

1995 ஆம் ஆண்டு இலக்கம் 5 இன் கீழ் குற்றவாளி ஒப்படைக்கும் சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக இலங்கையில் நீதி மன்றம் ஒன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டனை விதித்து சிறைச்சாலையில் அடைக்கப்படும் வேறொரு நாட்டு பிரஜைக்கு இந்த தண்டனை அந்த நபர் பிரஜைக்கான உரிமை கோரும் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு முடியும். அத்தோடு வேறொரு நாட்டில் சிறைச்சாலைகளில் அடைக்;கப்படும் பொழுது தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை பிரஜைக்கு அந்த தண்டனை எஞ்சிய காலத்தை இலங்கையில் அனுபவிக்க முடியும். இந்த சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டதாக மேற்கொள்வதற்காக இலங்கை மற்றும் சம்பந்தப்பட்ட எனைய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும். இதற்கு அமைவாக இலங்கையிலும் செக் குடியரசிலும் தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் இரு நாடுகளின் சட்ட விதிகளுக்கு அமைவான வகையில் இரு நாடுகளுக்கிடையில் ஒப்படைத்தல் தொடர்பில் உடன்படிக்கையை எட்டுவதற்காக நீதி மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு இணைந்ததான தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப சான்று பத்திரம் / டிப்ளோமா கற்கை நெறிக்கு 1000 சந்தர்ப்பத்தை அறிமுகப்படுத்துதல்.

தற்பொழுது உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் ஆக கூடுதலான கோரிக்கை உள்ள மென்பொருள் தயாரிப்பு இணையத்தளத்தை அடிப்படையாக கொண்ட தொழில்வாய்ப்;பு போன்ற தகவல் தொழிலுக்கான சந்தர்ப்பத்திற்கான தகவல் தொழில் நுட்ப துறையில் தொழில் வர்த்தக சந்iதையை இலக்காக கொண்டு தொழில்நுட்ப கற்கை நெறிகள், ஏனைய கற்கை நெறிகளை கற்கும் அல்லது உயர் தரத்தில் சித்தி எய்திய மாணவர்களுக்கு சான்றிதழ் பத்திரம் ஃ டிப்ளோமாஃ உயர் டிப்ளோமா கற்கை நெறிக்கான பயிற்சி சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கான துரிதமான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் 2020 ஆம் ஆண்டில் 1000 பேருக்காக ஆரம்பிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டளவில் பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை 3,000 ஆக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இணைந்த தியகம தொழில்நுட்ப நிறுவனத்தை அடிப்படையாக கொண்டு அங்கு கற்கை நெறிகளை நடத்துவதற்கும் கற்கை நெறிகளை வகுப்பதற்குமாக அரச மற்றும் தனியார் பிரிவுகளில் சேவையில் ஈடுபட்டுள்ள தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிபுணர்களைக்கொண்ட குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கும் உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள 72 ஆவது தேசிய தின விழா.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள 72 ஆவது தேசிய தின விழாவின் நிகழ்ச்சி நிரலை வகுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமரை தலைவராக கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்காக அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று 72 ஆவது தேசிய தின விழா கொழுப்பு 07, சுதந்திர சதுர்க்கத்தில் நடத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கபட்டுள்ளது.

05. விவசாய அமைச்சை மீண்டும் ஷகொவியன மந்திரய' - விவசாய மாளிகை என்ற கட்டிடத்தில் ஸ்தாபித்தல்.

கமநல அமைச்சு அமைக்கப்பட்டிருந்த பத்தரமுல்லை ரயமல்வத்த குறுக்கு வீதியில் அமைந்துள்ள 'கொவியன மந்திரய' என்ற அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் பாராளுமன்ற தெரிவுக்குழு முறையில் அமைக்கப்படும் நோக்கில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் இலங்கை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கபட்டிருந்தது. இருப்பினும் இந்த கட்டிடம் இது வரையில் எதிர்பார்த்த நோக்கத்திற்காக முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதேபோன்று கமநல அமைச்சு வாடகை அடிப்டையில் வேறொரு கட்டிடத்தில் ஸ்தாபிப்பதற்கு ஏற்பட்டதினால் கட்டிடத்திற்கான வாடகை என்ற ரீதியில் மாதாந்தம் சுமார் 21 மில்லியன் ரூபா செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கட்டிடத்தில் உள்ள வசதி போதுமானதாக இல்லை என்பதினால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் போன்றே பணியாளர்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு கமநல அமைச்சு மற்றும் அதற்கு உட்பட்ட ஏனைய நிறுவகங்களை கொவியன மந்திரய என்ற கட்டிடத்தில் ஸ்தாபிப்பதற்காக மகாவலி விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. புதிய கல்வி மறுசீரமைப்பு ஆலோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சிற்குள் சிறப்பு பணிப்பிரிவு ஒன்றை ஸ்தாபித்தல்.

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு ஆலோசனைத் திட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதற்காக தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியிலான வழிகாட்டியை வழங்குவதற்காக 'கல்வி தொடர்பான சிறப்பு பணிப்பிரிவு ஒன்றை' அமைக்கப்படுவது அத்தியாவசியமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு ஆலோசனைத் திட்டங்களையும் மூலோபாயங்களையும் அடையாளம் காணுதல் , நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல், சம்;பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழிகாட்டிகளை வழங்குதல் மற்றும் ஒழுங்குறுத்துதல் மற்றும் மீள்தரவுகளை வழங்குவதற்காக கல்வி சிறப்பு பணிப்பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் அதற்காக சம்பந்தப்பட்ட துறை தொடர்பான விடயதான நிபுணர்களைக் கொண்ட சிறப்பு பணிப்பிரிவு ஒன்றை நியமிப்பதற்கும் கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. உள்ளக தொடர்புகளுக்காக நவீன வீதி வலைப்பின்னல் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துதல்.

நாட்டை மேம்படுத்தும் சுபீட்ச தொலைநோக்கு என்ற தேசிய கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான முக்கிய சாதனம் என்ற ரீதியில் வீதி வலைப்பின்னல் கட்டமைப்பை நவீன மயப்படுத்துவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வாகன நெரிசல் உள்ளமை அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்தை குறைப்பதற்காக தேசிய நெடுங்சாலையில் 3-5 கிலோ மீற்றர் இடைவெளிக்கு பின்னர் அனைத்து நிரல்களிலும் (Over taking Lanes) நிர்மாணித்தல். வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்தை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச தரத்தை உறுதி செய்யும் வகையில் மொத்த வீதி வலைப்பின்னலும் புதிதாக வகுத்து நவீனமயப்படுத்துதல் பிரதான வீதி மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய வகையில் 100,000 கிலோ மீற்றருக்கு ஷமாற்று வீதி வலைப்பின்னல். ஓன்று அபிவிருத்தி செய்தல் அந்த மாற்று வீதி வலைப்பின்னலில் பிரவேசிப்பதற்காக கிராமிய வீதிகளை மேம்படுத்துதல் என்ற முக்கிய திட்;டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. பாரம்பரிய ஓடு, செங்கல் மற்றும் மட்பாண்ட தொழில்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய தொழில்துறையினருக்கு களி மண்ணை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளைச் செய்தல்.

2009 ஆண்டு இலக்கம் 66 இன் கீழான சட்டத்தின் திருத்தத்தின் 1992 ஆம் ஆண்டு இலக்கம் 33 இன் கீழான கனியவள பொருட்கள் சட்டத்திற்கு அமைவாக ஏதேனும் களிமண்ணை அகழ்வை மேற்கொள்ளும் எத்தகைய நபர் அல்லது நிறுவனம் அதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு அந்த மூலப் பொருட்களை தொழிற்சாலை முன்னெடுக்;கப்படும் இடத்திற்கு ஏற்றி செல்வதற்காகவும் அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த அனுமதிப்பத்திர முறையில் உள்ள உட்சிக்கல் நிலை காரணமான சிறிய அளவிலான களிமண் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளமையை கவனத்தில் கொண்டு மணல், களி மண், மற்றும் மண்ணை ஏற்றி செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவையில் தளர்வை ஏற்படுத்துவதற்காக தற்பொழுது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஓடு, செங்கல் மற்றும் மட்பாண்டம் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு தமது தயாரிப்பு நடவடிக்கைகளை நிரந்தரமாக முன்னெடுக்கக் கூடிய வகையில் மூலப்பொருளை பெற்றுக்கொள்வதில் தற்பொழுது உள்ள அனுமதிப்பத்திர முறையில் மேலும் தளர்வை எற்படுத்தி மிகவும் செயற்றிறன் மிக்கதும் இலகுவான முறையை அறிமுகப்படுத்துவதற்காகவும் நதிக்கரை போன்ற சுற்றாடல் பிரதேசங்களில் இதனால் தாக்கம் ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்காகவும் தேவையான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதற்காக 1992 ஆம் ஆண்டு இலக்கம் 32 இன் கீழான அகழ்வு மற்றும் கனியவள சட்டத்தில் 28 மற்றும் 30 சரத்துக்களை தேவையான வகையில் திட்டத்தை மேற்கொள்வதற்காக சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 2020 ஆம் ஆண்டில் முப்படையினருக்கு தேவையான உணவு பொருட்களை விநியோகிப்பதற்காக பெறுகைகளை வழங்குதல்.

2020 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம். இலங்கை கடற்படை, மற்றும் இலங்கை விமான படை ஆகியவற்றிற்கு தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசுக்கு அமைய இந்த பெறுகைகளை வழங்குவதற்காக மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்திற்கு அமைவாக உடனடித் தேவையை பூர்த்தி செய்வதற்காக வர்த்தமானி அறிவிப்பை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பித்தல்.

நாட்டை மேம்படுத்தும் சுபீட்ச தொலைநோக்கு என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பயிர்களைப் போன்று தயாரிக்ககூடிய பொருட்களை முடிந்த வகையில் இந்த நாட்டுக்குள் உற்பத்தி செய்வதற்காக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டுக்குள் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு நாணயம் நாட்டுக்கு அப்பால் செல்வதை கட்டுப்படுத்துவதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அமைவாக ஜாதிபத்திரி, கிராம்பு, மஞ்சள் மிளகு, கருவா, சாதிக்காய், பாக்கு, புளி, உளுந்து அடங்கலாக பலசரக்கு பொருட்கள் மற்றும் பட்டம் ,விளக்குகள், வெசாக் கூடு மற்றும் பத்தி போன்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை விதித்து வெளியிடப்பட்ட 2019.12.06 திகதியிட்ட வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. சபிரி கமக் என்ற முழுமையான கிராமம் பொதுமக்கள் பங்களிப்புடனான கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம்.

கிராம வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்துதல் அதன் மூலம் கிராம மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்ட சபிரி கமக் என்ற பெயரில் பொது மக்களின் பங்களிப்புடன் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று 2020 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நாட்டில் உள்ள 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குள் ரூபா 2,000,000 பெறுமதியைக்கொண்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதன் வேலைத்திட்டம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக கௌரவ பிரதமர் மற்றும்; கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. தேசிய கொள்கை மற்றும் மூலோபாய செயற்பாட்டு பணியகம் ஒன்றை அமைத்தல்.

தேசிய கொள்கை மற்றும் மூலோபாயம் அரச முதலீட்டை ஒதுக்கீடு செய்தல் தேசிய அபிவிருத்தியை திட்டமிடும் பெறுகை செயற்பாடுகள் திட்ட மீளாய்வு மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளுக்கான செயற்பாடுகளை ஒழுக்க விதிகளுக்கு அமைவாகவும் அரசாங்கத்தின் மூலோபாய இருப்புக்கு அமைவாக மேற்கொண்டு வெற்றிகரமான பொருளாதார இலக்கை அடைவதற்கு தேவையான பொருளாதார கொள்கையை வகுப்பதற்கென கொள்கை மற்றும் மூலோபாய பணியகம் ஒன்றை அமைப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. தொழிற்சாலை மற்றும் தொழில்துறை அபிவிருத்திக்கான சர்வதேச அமைச்சின் செயற்பாட்டு பணியகத்தை ஸ்தாபித்தல்.

பொருளாதார அபிவிருத்திக்காக பாரிய பின் புலத்தை வழங்கும் தயாரிப்பு தொழிற்சாலை பிரிவின் கொள்கை தீர்மானங்களை மேற்கொள்ளும் பொழுது ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் பிரச்சினைகளைக் கொண்ட நிலைமையை குறைக்கும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதியின் தலைமை மற்றும் தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் உள்ளிட்ட ஏனைய சம்பந்தப்பட்ட அமைச்சர்களினதும், அமைச்சின் செயலாளர்களினதும் , அதிகாரிகளினதும் அங்கத்தவர்களைக் கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில்துறை அபிவிருத்திக்கான உள்ளக அமைச்சின் செயற்பாட்ட பணியகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. மிலேனியம் சலஞ்சஸ் என்ற அபிவிருத்தி உடன்படிக்கையை மீளாய்வு செய்தல்.

அடையாளம் காணப்பட்ட பல துறைகளின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மிலேனியம் சலஞ்சஸ் திட்ட அலுவலகத்தினால் வழங்கப்படும் முக்கிய நிதியை பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையில் அடங்கிய உடன்படிக்கை மற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக 2019.10.29 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை கவனத்தில் கொண்டு மிலேனியம் சலஞ்சஸ் திட்டம் தொடர்பில் முழுமையாக மீளாய்வு செய்து அரசாங்கத்திற்கு மீளாய்வுகளை சமர்ப்பித்ததற்காக கீழ் கண்ட அங்கத்தவர்களை கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கும் அந்த குழுவினால் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் வரையில் 2019.10.29 அன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பேராசிரியர் லலித்த ஸ்ரீ குணருவன் அவர்கள் (தலைவர்)

டி.எஸ். ஜெய வீர அவர்கள் போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர்.
ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன அவர்கள்.

நாலக்க ஜயவீர அவர்கள்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -