கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப் பிரிவு இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா 2019 சனிக்கிழமை (28) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பிரதேச செயலாளர் கலாசார அதிகார சபை தலைவர் தேசபந்து எஸ்.எல் முகம்மத் ஹனிபா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
பிரதம அதிதியாக கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் , கெளரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம் நெளஷாட்,அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் வி.ஜெகதீசன்,அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் ஏ.எம் அப்துல் லதீப் அவர்களும் இலக்கிய அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் விசேட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது கலை கலாசார நிகழ்ச்சிகளும்,கலைஞர் கெளரவிப்பும்,போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.