2019.12.18 ம் திகதி மாலை 04.30 மணி துவக்கம் 6. 30 மணி வரை BCMH இன் தலைவர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 100 வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அகில இலங்கை மக்கள் காங்ரஷின் பிரதேச அமைப்பாளரான ஆசிரியர் அன்சார் அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக நடை பெற்று முடிந்தது.
இந் நிகழ்வில் ஆசிரியர் அன்சார் உரையாட்டுகையில்,
"எமது ஊரில் பாதைகள் , Volleyball ground, ஜும்மா பள்ளி வாயிலுக்கான மதில்கள் என பல சேவைகள் எமக்கு வழங்கி இருக்கிறார், எதிர் காலத்தில் இன்னும் பல சேவைகள் செய்ய எத்தனித்துள்ளார் எனவே கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமை பட்டுள்ளோம் என அவரின் உரையில் குறிப்பிட்டார்"
நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்ரசின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், BCMH இன் தலைவருமான கெளரவ அலி சப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்ததோடு இதில்,
அதிதிகளாக
பணிப்பாளர் றிஸ்வான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்லியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட செயலாளர் ஜௌசி , BCMH இன் ஊடக இணைப்பாளர் சில்மியா யூசுப், அகில இலங்கை மக்கள் காங்ரஷின் ஊடக இணைப்பாளர்கள், மதவாக்குளம் பாடசாலை அதிபர் பஷீர், மற்றும் பள்ளிவாயல் நிர்வாகியான பாருக் என அனைவரும் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.