சாய்ந்தமருது அரபாத் மிலேனியம் முன் பள்ளி பாலர் பாடசலையின் 27 வருட நிறைவும் வருடாந்த விடுகை வைபவமும், பரிசளிப்பு விழாவும் கல்முனை -சாஹிரா தேசிய பாடசாலையின் எம்.எஸ் காரியப்பர் மண்டபத்தில் பாலர் பாடசாலையின் ஸ்தாபகர் ஆயிஷா நூர்தீன் தலைமையில் (21) சனிக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் ,தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஏ.எல்.எம். அதாவுள்ளா கலந்துகொண்டார்.
மேலும் கெளரவ அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல்,ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளரும் மருதம் கலைக்கூட மன்றத்தின் தலைவர் அஸ்வான் மெளலானா கலந்து சிறப்பித்ததுடன் மற்றும் ஏனைய அதிதிகள் முன் பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள், இடம்பெற்றது.