கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனையன்ஸ் போரமினால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (28) கல்முனை அலியார் வீதியில் அமைந்துள்ள அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் பெண்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்யமுடியும் எனவும் அவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்முனையன்ஸ் போர ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
எமது ஒரு துளி இரத்தத்தின் மூலம் இன்னுமொரு உயிரை வாழ வைக்க நாம் ஒவ்வொருவரும் முன்வருவோம் எனும் தொனிப் பொருளில் குறித்த போரம் 4வது வருடமாக இந்த இரத்ததான முகாமினை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.