இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் - கடந்த மூன்று வருட காலத்திற்குள் இலங்கையா்கள் தொழில் வாய்ப்புக்காக 29 நாடுகளுக்குச் சென்றவா்களுள் 1043 பேர் மரணமடைந்துள்ளாா்கள். இவா்கள் இயற்கை மரணம், விபத்துக்கள், வீதிப்போககுவரத்தில் மற்றும் தற்கொலை, தொழில் நிமித்தம் விபத்துக்கள், இயற்கை மரணம், தற்கொலை , தண்டனைகள், போன்ற காரணங்களாலேயே இவா்கள் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரவிக்கின்றது.
இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவலிலின் மேலும் கூறப்பட்டுள்ளதாவது 2019 ஜனவரி 1ஆம ்திகதியில் இருந்து டிசம்பா் 4ஆம் திகதி வரை 194 இலங்கைத் தொழிலாளா்கள் இறந்துள்ளாா்கள். கடந்த ஆண்டான 2018ல் 239 பேர், 2017ல் 291 பேர் 2016ல் 295 பேர் மரணமடைந்துள்ளாா்கள். 2016 தொடக்கம் 2019ஆண்டு காலப்பகுதியில் சவுதி அரேபியாவில் மட்டும் 362 பேர் . குவைத் நாட்டில் 214 பேர், கட்டாா் நாட்டில் 133, ஜக்கிய அரபு எமிரேட்ஸில் 125 பேர் தென் கொரியாவில் 32 பேர்கள் மரணமடைந்துள்ளாா்கள் . இவா்கள் தமது தொழில் நிமித்தம் குறைந்த அனுபவம் கொண்ட தொழிலாளிகளே கூடுதலாக இறந்துள்ளாா்கள்.
இலங்கையின் பொருளாதார வளா்ச்சியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றவா்கள் 2018 ஆம் ஆண்டில் ஜக்கிய அமேரிக்க டொலா் 7 பில்லியன்களை அன்னியச் செலவாணியை சம்பாதித்துள்ளாாகள் எமது நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் இத் தொகை 7.9 வீதமாகும். இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் அறிக்கையில் மேலும் தகவல் தருகையில் 2017-2021 ஆண்டு வரை 1.5 மில்லியன் இலங்கையா்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பினால் இலங்கையின் சனத்தொகையில் 25வீதமாணவா்கள் வெளிநாடுகளில் வாழ்வதற்கு திட்டம் வகுத்துள்ளது. வெளிநாடுகளில் வேலை நிமித்தம் செல்வோா் அணைவரும் கண்டிப்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக காப்புறுதி செய்யப்பட்டே அனுப்பப்படுகின்றனா். அவா்களுக்கு அங்கு வேலை செய்யும் காலப்பகுதியில் ஏற்படும் உயிா் இழப்புகளுக்கு அவா்களின் உறவிணா்களுக்கு இழப்பீட்டுக் காப்புறுதி பணம் வழங்குவதாகவும் இலங்கை வெளிநாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லுவோா் கண்டிப்பாக தமது கடவுச் சீட்டில் காப்புறுதி செய்தல் கடமையாக்கப்பட்டுள்ளது.