அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 5916 குடும்பங்களில் 2071 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்குகின்ற நிகழ்வு காரைதீவு மாளிகைக்காடு 'லங்கா சதோச' நிறுவனத்தில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் நேற்று (18)புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது உலர் உணவுப் பொருட்களான அரிசி, சீனி,பருப்பு, கடலை, பால்மா, டின்மீன் போன்றன வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்ச்சி திட்டத்திற்காக சுமார் 3 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி செலவிடப்பட்டது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ஜனாப் எம்.எஸ்.எம் அசாருதீன் கலந்து கொண்டார்.