கட்டாக்காலிகளுக்கு 3000 ரூபா அபராதம்; கல்முனை மாநகர சபை தீர்மானம்

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட வீதிகள் மற்றும் பொது இடங்களில் அலைந்து திரிகின்ற நிலையில், பிடிக்கப்படுகின்ற கட்டாக்காலி ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து மாடொன்றுக்கு தலா 3000 (மூவாயிரம்) ரூபா வீதம் அபராதம் விதிப்பது என கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டாக்காலி கால்நடைகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படுவது தொடர்பிலான விடயம் ஆராயப்பட்டபோதே இத்தண்டப்பணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த கால்நடைகள் பிடிபட்ட அன்றே அவற்றின் உரிமையாளர்களினால் அபராதத் தொகை செலுத்தப்பட்டு, மீட்கப்படாமல் இருப்பின், பிந்திய நாள் ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக 1000 ரூபா வீதம் அறவிடுவது எனவும் கால்நடைகளைப் பிடிக்கும் பணியாளருக்கு தலா 500 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்குவது என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறு பிடிபட்ட கால்நடைகள் ஒரு வருட காலத்தினுள் அவற்றின் உரிமையாளர்களினால் மீட்கப்படா விட்டால், அவை ஏலத்தில் விற்கப்பட்டு, பராமரிப்பு செலவு போக மீதித் தொகையை மாநகர சபை நிதியத்தில் வைக்கப்பட வேண்டும் என்று மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுச் சந்தைகள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் கட்டாக்காலி ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அலைந்து திரிவதனால் பொது மக்களும் வர்த்தகர்களும் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாவதுடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது இக்கால்நடைகள் பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு வந்தபோதிலும் அண்மைய நாட்களாக நிலையில், இவை பிடிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடுகின்ற நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -