உணவு ஒவ்வாமையினால் 30 பேர் வைத்தியசாலையில்.

க.கிஷாந்தன்-
விசேட விருந்துபசார வைபவம் ஒன்றில் உணவு ஒவ்வாததன் காரணமாக எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதர தோட்டத்தில் சிறுமி உட்பட 30 பேர் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெமோதர தோட்டத்தில் தோட்ட தொழிற்சாலையில் 29.12.2019 அன்று இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அத்தோட்டத்தின் மக்களில் சிறுமி அடங்களாக ஆண்களும், பெண்களும் உணவு உட்கொண்டுள்ளனர்.

இதன்போது வழங்கப்பட்ட உணவு ஒவ்வாததன் காரணமாக வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டதன் காரணமாக 30.12.2019 அன்று காலை தெமோதர பிரதேச மற்றும் பதுளை மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அணைவரும் ஒரே குடும்பங்களையும், வெவ்வேறு குடும்பங்களையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை மேலும் குறிப்பிடதக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -