32 இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்

 
ஐ. ஏ. காதிர் கான்-


புதிய அரசின் 32 இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் (09) வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி 38 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதோடு, கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதற்கு அமையவே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர்கள் வருமாறு :

1. எஸ்.எச். ஹரிச்சந்திர -
நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சு, 

2. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க -
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,

3. எஸ். சேனாநாயக்க -
நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,

4. எம்.சி.எல். ரொட்ரிகோ -
காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,

5. திருமதி எஸ்.எச்.ஏ.என்.டி. அபேரத்ன -
பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,

6. பீ.கே.எஸ். ரவீந்திர -
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,

7. டி.ஏ.டப்ளியு. வணிகசூரிய -
ரயில்வே சேவைகள் இராஜாங்க அமைச்சு,

8. பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார -
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சு,

9. திருமதி டி.எஸ். விஜேசேகர -
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி இராஜாங்க அபிவிருத்தி அமைச்சு,

10. திருமதி எல்.டி. சேனாநாயக்க -
சர்வதேச ஒத்துழைப்புக்கள் இராஜாங்க அமைச்சு,

11. செல்வி ஆர்.எஸ்.எம்.வி. செனெவிரத்ன -
சுதேச மருத்துவ சேவைகள் இராஜாங்க அமைச்சு, 

12. திருமதி ஏ.எஸ். பத்மலதா - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு,

13. கே.எச்.டி.கே. சமரகோன் -
மின்சக்தி இராஜாங்க அமைச்சு,

14. எம்.ஏ.பி.வீ. பண்டாரநாயக்க - இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு, 

15. எம். தேவசுரேந்திர -
வலுச்சக்தி இராஜாங்க அமைச்சு,

16. எஸ்.ஜீ. விஜேபந்து -
அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு,

17. எஸ். அருமைநாயகம் -
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு,

18. எம்.எஸ்.எஸ்.எஸ். பெர்ணான்டோ -
சுற்றுலா அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு,

19. சி.எஸ். லொக்குஹெட்டி - தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு,

20. திருமதி ஜீ.சி. கருணாரத்ன -
மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு,

21. ஏ. சேனாநாயக்க -
மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,

22. எம்.ஐ. அமீர் - ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சு,

23. டி.டி. மாத்தற ஆரச்சி -
அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் முன்மொழிவுகள் இராஜாங்க அமைச்சு,

24. என்.பி.வீ.சி. பியதிலக்க -
துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,

25. செல்வி ஈ.எம்.எம்.ஆர்.கே. ஏக்கநாயக்க -
போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு,

26. செல்வி கே.டப்ளியு.டீ.என். அமரதுங்க -
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,

27. செல்வி ஏ.கே.டப்ளியு.எம்.என்.கே. வீரசேகர -
வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சு,

28. திருமதி ஏ.டி.சி. ரூபசிங்க -
சுற்றாடல் இராஜாங்க அமைச்சு,

29. கே.ஏ.கே.ஆர். தர்மபால -
கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு,

30. செல்வி கே.ஜி.ஏ. அலவத்த -
சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு,

31. செல்வி ஆர். விஜயலட்சுமி -
சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு,

32. அநுராத விஜேகோன் -
தேயிலைக் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -