அன்னம் தோல்வியின் பக்கம் திரும்பிய புள்ளி... 52 நாள் ஆட்சி மாற்றம்....


கங்களின் அடிப்படையிலான கணிப்புக்கள் பிழைக்கலாம். நடந்தேறிய ஒரு விடயத்தை வைத்து கூறும் உண்மைகள் வரலாற்றிற்கு மிக அவசியமானது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து அசைக்க முடியாத வெற்றியை கோத்தாபாய பெற்றுள்ளாரென்ற அலசல்களை அவதானிக்க முடிகிறது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கோத்தாவின் வெற்றி எங்கே உறுதியாகியுள்ளது, எங்கு ஐ.தே.க வெற்றியை தவற விட்டுள்ளது என்பவற்றை அறிவதும் அவசியமானது.
52 நாள் ஆட்சி மாற்றம் அனைவருக்கும் நினைவிருக்கும். அன்றைய வியூகத்தில் ஐ.தே.க வெற்றியும் பெற்றிருந்தது. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியையும் தழுவியிருந்தார். குறித்த விடயத்தில் ஐ.தே.க வெற்றி பெற்றிருந்தாலும், அதுவே, அவர்கள் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை உறுதி செய்துகொண்ட புள்ளியாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபாய 1 303 461 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார். சஜித் வெற்றி பெற்றிருக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாவின் வாக்குகளிலிருந்து 651 732 வாக்குகளை பிரித்திருந்தால் போதுமானதாகும். இது சு.கவால் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியுமான வாக்கு என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர். கடந்த ஜனாதிபதி தேர்தல் வரை ஐ.தே.கவானது சு.கவினரை அரவணைத்து சென்றிருந்தால், இத் தோல்வியை தவிர்த்திருக்கலாம் என்பதே இவற்றிலிருந்த அறிந்துகொள்ளக் கூடிய பேருண்மையாகும். அன்னத்தின் தோல்வி உறுதியான புள்ளி 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போதாகும். அன்றே இரு அணியும் முரண்பட்டு பிரிந்தது.

52 நாள் ஆட்சி மாற்ற காலப்பகுதியில் மொட்டு அணியினர் தங்களது பலத்தை, மக்கள் செல்வாக்கை பிரதேச சபை தேர்தலினூடாக நிரூபித்திருந்தனர். அவர்களது அவ் வெற்றியானது ஐ.தே.கவின் செல்வாக்கு மக்களிடையே குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தமையை துல்லியமாக்கியிருந்தது . இப் பிரச்சினை எழுந்து மிக குறுகிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடந்தாக வேண்டிய சூழலும் இருந்தது. இந் நிலையில் ஐ.தே.கவானது சு.கவை எதிர்க்காது, அரவணைக்கும் உத்திகளையே முன்னெடுத்திருக்க வேண்டும்.

அன்று இரு கட்சிகளும் முரண்படாது பயணிக்க ஒரு வாய்ப்புமிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ரணில் அல்லாத ஒருவரை பிரதமராக்க கோருங்கள் என கூறியுமிருந்தார். இதற்கு ஐ.தே.க உடன்பட்டு சென்றிருந்தால், இம் முறை ஐ.தே.க தோல்வியை சந்தித்திருக்காது. இம் முறை ஐ.தே.கவின் தலைவர் ரணிலை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவரது கட்சியினரே விரும்பியிருக்கவில்லை. அவரது தலைமைத்துவத்தை மாற்ற வேண்டுமென்ற கோசங்களும் வலுப் பெற்றுள்ளன. இதனை ஐ.தே.கவினர் முன்னின்று செய்வதற்கு முன்பு அன்றே மு.ஜனாதிபதி செய்திருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்தி அவரை அன்றே ஐ.தே.கவினர் தூரமாக்கியிருக்கலாம்.
அன்று ஐ.தே.கவானது ரணில் அல்லாத ஒருவரை பிரதமராக நியமிக்க கோரியிருந்தால், சு.கவும் அவ் ஆட்சியின் பங்காளியாகியிருக்கும். சு.கவின் முக்கியஸ்தர்களை அமைச்சின் மூலம் கட்டிப் போட்டிருக்கலாம். இது தவிர்ந்து பல இடங்களில் ஐ.தே.கவானது சு.கவை புறக்கணித்ததற்கான சான்றுகளுமுள்ளன. காலம் சென்று ஞானம் பிறப்பதில் பயனேதுமில்லை.

மேலுள்ள விடயங்களை வைத்து சிந்திக்கும் போது ஐ.தே.கவின் வெற்றியானது தோல்வியின் பக்கம் திரும்பிய புள்ளியாக 52 நாள் பிரச்சினையை குறிப்பிடலாம். இம் முறை மொட்டு அணியினர் சு.கவை புறக்கணித்திருந்தால் தோல்வியை சந்தித்துமிருப்பர்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -