திகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலக பிரிவில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 87 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் இன்று(14) வழங்கிவைக்கப்பட்டன.
பிரதேசெயலாளர் கு.குணநாதனின் வழிநடத்தலில் வழங்கப்பட்ட இவ்வுதவிபொருட்கள் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் ஏஜேடபிள் எஸ் அமைப்பின் நிதி ஆதாரத்துடன் வழங்கப்பட்டன.கிராசேவகர் திருமதி காளிப்பிள்ளை தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி ந.அஞ்சலிதேவி. கிராமத்தலைவர்கள் போறொர்கலந்துகொண்டு வழங்கிவைத்தனர். வெருகலில் 87 குடும்பங்களைச்சார்ந்த 288பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என மாவட்டஅனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.