ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் இனால் கடந்த 22/12/2019 ம் திகதி அமைப்பின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு “ போதையை ஒழிப்போம் புதுயுகம் படைப்போம்” எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வானது அதன் அரம்பகர்த்தவும் ஸ்தாபகருமான சட்டத்தரணி Maryam Naleemudeen அவர்களின் தலைமையில் மாளிகைக்காடு Bawa Royale வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தென் கிழக்கு பல்கலைக்கழக கலை பிரிவு பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றியதுடன் Dr. Naleemdeen அவர்கள் விசேட உரையும் நிகழ்த்தினார். அத்துடன்
'போதையை ஒழிப்போம் புது யுகம் படைப்போம் ' எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய முதல் மூன்று நிலை வெற்றியாளர்களுக்கு A. R. மன்சூர் ஞாபகார்த்த கிண்ணம், சான்றிதழ்கள் மற்றும் பொற்கிளிகள் போன்றன வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் விசேட நிகழ்வாக முன்னால் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஆவண ஒளித் தொகுப்பு அன்னாரின் பாரியார் ஹாஜியானி சுஹரா மன்சூர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திரை நீக்கம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து அமைப்பின் தலைவர் எச்.எம். பஸ்மீர் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -