போட்டி போட்டு பஸ்கள் ஓடியதால் அவதிப்பட்ட பயணிகள்!

எச்.எம்.எம்.பர்ஸான்-

போட்டிபோட்டு பஸ் ஓடியதில் ஏற்பட்ட முரண்பாடு பொலிஸ் நிலையம் வரைச் சென்றுள்ளது.

பொலன்னறுவையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கியும், காத்தான்குடி நோக்கியும் சனிக்கிழமை (28) பயணித்த இரு பஸ் சாரதிகளுக்கிடையில் பயணிகளை ஏற்றுவது தொடர்பான போட்டி ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொலன்னறுவையிலிருந்து தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் பயணிகளை ஏற்றிக் கொண்டு அக்கரைப்பற்றை நோக்கியும், காத்தான்குடியை நோக்கியும் பயணித்துக்கொண்டிருக்கும் போது இதில் யார் முந்திக் கொண்டு பயணிகளை ஏற்றுவது என்று இருவருக்குமிடையில் போட்டி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போட்டியின் போது தனியார் பஸ் வண்டி சாரதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புணானை பகுதியால் பஸ் இரண்டும் பயணிக்கும் போது நடு வீதியில் பஸ்சை நிறுத்தி குறித்த சம்பவத்தில் தொடர்புபட்ட மற்றைய பஸ் சாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி சாரதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் இரு சாரதிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு பஸ்களை போட்டிபோட்டு சாரதிகள் செலுத்துவதால் பாரிய வித்துக்கள் இடம்பெறுவதாகவும், அவசர தேவைகள் நிமித்தம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் குறித்த பஸ் வண்டிகளில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -