கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை அண்டிய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவுகின்ற போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிய போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த சில தினங்களில் ஒத்திகை பார்க்கப்பட்ட புதிய போக்குவரத்துத் திட்டம் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், சகல உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலை அணுக முடியும்.
வாகனங்கள் உள்நுழையும் வாயில் மற்றும் வெளிச்செல்லும் வாயில் தொடர்பாக வீதி அடையாளப் பலகைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புப் பிரிவினரால் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
மினுவாங்கொடை திசையிலிருந்து வருகை தரும் மற்றும் மினுவாங்கொடை திசை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் முன்பு போல கட்டுநாயக்க, மினுவாங்கொடை வீதியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க - மினுவாங்கொடை வீதி வழியாக உள்நுழையும் வாயிலுக்குள் நுழையும் வாகனங்களுக்கு இதுவரை காணப்பட்ட நுழையும் வாயில் மூடப்பட்டுள்ளதோடு, அவ்வாகனங்கள் விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் வழியாக விமான நிலையத்திற்குள் செல்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.