உறுப்பினர் அஸீஸின் ஏற்பாட்டில் பிரதேச பொதுமக்களின் பங்களிப்புடன் மாளிகைக்காடு பாலத்தின் இருமருங்கிலும் பூமரங்கள்

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சாய்ந்தமருது தோணா பிரதேசத்தை சுத்தமாகவும் அழகாகவும் பேணும் திட்டத்தின் அடிப்படையில் கல்முனை மாநகரசபை சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸின் ஏற்பாட்டில் பிரதேச பொதுமக்களின் பங்களிப்புடன் மாளிகைக்காடு பாலத்தின் இருமருங்கிலும் பூமரங்களை நாட்டி அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று ( 29 ) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை சுயேட்சை குழு உறுப்பினர் எம்.வை.எம்.ஜஹ்பர் , பிரதேச இளைஞர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது தோணா பலவருட காலமாக பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறியிருந்ததுடன் நுளம்புகளும் விச ஜந்துக்களும் குடியிருக்கும் பிரதேசமாக காணப்பட்டதுடன் சுற்றாடலுக்கு பலத்த சவாலாகவும் அமைந்திருந்தது.
இத் தோணாவை சுத்திகரிப்பதில் பலரும் பலவழிகளில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் பொது மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமையினால் அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது.
தற்போது பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதுடன் பெரும் பங்களிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -