தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்திலும் போட்டியிடலாம் - தடைகள் இல்லை - எம்.பி இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு


க.கிஷாந்தன்-
டந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் விட்டுக்கொடுப்புடன் செயல்பட்டு இருக்கின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இருக்கும் என நான் எதிர்பார்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து 30.12.2019 அன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசியதாவது,

இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்தில் போட்டியிட வேண்டுமாக இருந்தால் அது எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை. மக்கள் தீர்மானிப்பார்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் என்பது சிறுபான்மை மக்களை பொருத்தவரையில் மிக முக்கியமான ஒரு தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் சிறுபான்மை மக்களுடைய பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் குறையாத வண்ணம் சிறுபான்மை கட்சிகள் செய்லபட வேண்டும் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பு.

பொதுவாகவே இந்த தேர்தலில் சிறுபான்மை மக்கள் எந்த காரணம் கொண்டும் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை குறைத்துக் கொள்ள கூடாது. அது சிறுபான்மை மக்களையே பாதிக்கும். குறிப்பாக சிறுபான்மை கட்சிகளுக்கிடையே ஒரு இணக்கபாடு இல்லாமல் முரண்பாடான கருத்துகளை தெரிவிப்பதோ அல்லது கருத்துகளை வெளியிடுவதோ காத்திரமான ஒரு விடயமாக அமையாது.

எனவே நாங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு விட்டுக்கொடுப்புடன் செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றிருக்கமோ அதேபோல இம்முறை தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வட பகுதியில் போட்டியிடலாம்.

ஏனைய பகுதிகளில் அங்கு இருக்கின்ற சிறுபான்மை கட்சிகள் போட்டியிட்டு அவர்களுடைய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் எதிர்காலத்திலும் நாங்கள் பல விடயங்களில் ஒற்றுமையாக செயல்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

அதனை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டாயமாக மலையகத்தில் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் கருதினால் அவர்களுக்கு எந்தவிதமான தடைகளும் இல்லை. அவர்கள் போட்டியிடலாம் ஒரு ஜனநாயக நாட்டில் யாரும் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மலையக மக்கள் கொண்டிருந்த அந்த நல்ல அபிப்பிராயம் பாதிக்கப்படும். அவர்கள் மீது மக்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். எனவே அவர்கள் சிந்தித்து செயல்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

அத்தோடு, இலங்கையில் சமாதானம், இன ஒற்றுமை இருக்க வேண்டுமானால் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவதற்கான வாய்ப்புகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், நடைமுறையில் இருக்கின்ற பழக்கத்தை மாற்றக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -