இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் பிரிவு மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் திருமதி. ஜி.செண்பகவல்லியின் பூரண அனுசரணையுடன் “மலையக சிறகுகள்” கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெகு விமர்சையாக மஸ்கெலியா பொது விளையாட்டரங்கில் நடைபெற்று முடிவடைந்தது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இ.தொ.கா தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்கமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய பிரதேச சபை தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா மற்றும் சாமிமலை பகுதிகளை பிரதிநிதித்துவபடுத்தி 16 அணிகள் பங்குபற்றிய இப்போட்டிகளில் முதல் பரிசான ரூபா 50,000/- பண பரிசையும், கேடயத்தினையும் சாமிமலை மஹானிலு அணியினரும், இரண்டாவது பரிசான ரூபா 25,000/- பண பரிசையும் கேடயத்தையும் மஸ்கெலியா வளதலை அணியினரும், மூன்றாவது பரிசான ரூபா 15,000/- பண பரிசையும் கேடயத்தையும், சாமிமலை ஸ்டொக்கம் அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு, வெற்றிபெற்ற அணியின் வீரர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.