ஊடகவியலாளர்கள் அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்றவேண்டும்

அல் ஜெஸிறா வித்தியால அதிபர் றியாஸ் 

பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்-
ந்த குறைகளைக் கண்டாலும் அவற்றுக்கெதிராக குரல்கொடுப்பதும், அதனை வெளிக்கொண்டு வருவதும் ஊடகவியலாளர்களின் செயற்பாடாகக் காணப்படுகின்றது. அதுமாத்திரமல்லாமல் அவர்களின் சொந்தத் தேவைகளையும் பாராமல் இரவு பகல் என்று 24 மணி நேரமும் தங்களின் ஊடகப் பணியினை செய்கின்றவர்களாக ஊடகவியலாளர்களின் பணி மிக மகத்தானதாக் காண்படுகின்றது என ஆலங்குளம் அல் ஜெஸிறா வித்தியால அதிபரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான றியாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 2019 ஆம் ஆண்டின் வருட இறுதி ஒன்றுகூடலும் 'நுஜாவின் குதூகலமும்' ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் அட்டாளைச்சேனை சம்புநகரில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்றவேண்டும். அவ்வாறு பணியாற்றுகின்றபோதுதான் சமூகத்தில் எமக்கொரு நன்மதிப்பிருக்கும். அதனை நாம் நிலையாக தக்கவைத்துக்கொள்ள இங்குள்ள ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் செயற்படவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோளாகும்.

நாம் பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் என்றில்லாமல் இந்த உலகில் எதனை செய்துவிட்டு செல்லப்போகின்றோம் என்று நாம் ஒவ்வொருவரும் இயங்கவேண்டும்.அந்தவகையில் நுஜா ஒன்றியத்திலுள்ள ஊடகவியலாளர்கள் எல்லோரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அறூஸ் தலைமையில் மிகச் சிறப்பாகவும், மிக நேர்மையாகவும், மக்களின் குறை நிறைகளை வெளி உலகத்துக்கு கொண்டு வருவது மாத்திரமல்லாமல் அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற, மேற்கொள்ளப்பட்ட நல்ல விடயங்களையும் கொண்டு வருகின்றார்கள்.

அதுமாத்திரமின்றி இன, மத, மொழி இவைகளைக் கடந்து சமூகத்திற்காக சேவையாற்றும் ஊடகவியலாளர்கள் அறிக்கையிடலின்போது அதில் மிக்க கவனமாக செயற்படல் வேண்டும். அவ்வாறு செயற்படத் தவறும் சந்தர்ப்பத்தில் அது ஒரு பிரச்சினையை உண்டுபன்னிவிடும் என்பதை கருத்திற்கொண்டு கவனமாக செயற்படவேண்டும். நமக்குத் தெரியாமல் சொற்கள் சேர்ந்துவிடும் அச்சொற்கள் நமக்கு தெரியாமலே பல முரண்பாடுகளை தோற்றுவிக்க சந்தர்ப்பமாக அமைந்து விடும். இவ்விடயங்களில் நாம் அவதானமாக பொறுப்புடன் செயற்படுவதோடு யாரும் பாதிக்கப்படாத வகையில் நிதானமாக கையாள வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
நேற்றுக் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும் பிரபல தொழிலதிபருமான தேசமாணி ஏ.எஸ்.அப்துல் வாசித், ஐக்கிய தேசியக் கட்டியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.ஆதம்லெப்பை, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹம்மட் றியாஸ், அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையின் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நுஜா ஊடகவியலாளர் ஒன்றித்தின் உறுப்பினர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான நாள் காட்டி மற்றும் பரிசுப் பொதிகளை வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வின்போது நுஜா ஒன்றியத்தின் உறுப்பினர்களினால் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுடன் கவியரங்குகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -