கினிகத்தேனை எபடின் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப மரணம்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்Nனை எபடிங் நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் மரணமடைந்துள்ளதாக கனிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (08) மாலை வேலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உரிழந்தவர் பலங்கொட அக்கரெல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட எம்.ரி. மஹேஸ் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கினகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் முடிந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
உயிரிழந்த நபர் கினிகத்தேனை பகுதியில் உள்ள அவரது உறவினர் ஒருவரின் வீடு ஒன்றுக்கு வருகை தந்து நேற்று மாலை மேலும் மூன்று நணபர்களுடன் எபடின் நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற வேளையில் கால் வழுக்கி நீர்வீழச்சியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
இறந்தவரின் சடலம் பிரேதவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று இரவு 8.20 மணியளவில் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -