பெற்றொர்கள் புத்திஜீவிகளின் கருத்துக்களைவைத்து விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தவேண்டாம் என்று எம்மால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி இன்று மூன்று ஆசிரியர்கள் ரியுசன் நடாத்துவதாக அறிகிறேன். உடனடியாக அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளேன்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் (7)சனிக்கிழமை காரைதீவு 12 கலைமகள் முன்பள்ளிப்பாடசாலையின் விடுகைவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்:
மாணவரின் ஓய்வு சுற்றுலா மேலும் தொடர் மழை வெள்ளம் அதனையொட்டிய டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் காரணமாக இவ்வுத்தரவை விடுத்தேன்.அதற்கு அனைத்து ஆசிரியர்களும் பெற்றோhர்களும் ஒத்துழைப்புத்தரவேண்டும்.
உண்மையில் எமது உத்தரவிற்கு 99வீதமானோர் செவிமடுத்து ரியுசனை நிறுத்தியுள்ளனர். பல பெற்றோர்கள் என்னிடம் நன்றியும் கூறினர்.
ஆனால் 3 ஆசிரியர்கள் இன்று மதியநேரவகுப்புகளை நடாத்துவiதாக தகவல்கிடைத்துள்ளது. உடனடியாக சம்மாந்துறைப்பொலிசாரிடம் முறையிட்டுள்ளேன். மேலும் இவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
நாம் மட்டுமல்ல கல்முனை பொத்துவில் ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் இத்தகைய விடுமுறைகால ரியுசன் தடை அமுலில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. மக்களுக்காகவே நான் செயற்படுகிறேன். அதற்கு எதிராக யார்வந்தாலும் தூக்கியெறியத்தயங்கேன். என்றார்.