திருகோணமலை நகரத்தை அழகுபடுத்தும் செயல் திட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலை நகர சபை மண்டபத்துக்கு அருகில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
சூரியன் உதயமாகும் கிழக்கை அழகுபடுத்துவோம் என்கிற மகுடத்திலான வேலை திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இச்செயல் திட்டத்தில் கிழக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள், அரசியல், சமூக, பொதுநல செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் பங்கெடுத்தனர்.
மேலும் ஆளுனர் அனுராதா ஜஹம்பத் நகரம் பூராவும் கள விஜயம் மேற்கொண்டு துப்புரவு பணிகள், சிரமதானங்கள் திறம்பட முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தினார்.