பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அவரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கிடையில் அவர் நாரஹென்பிட்டி லங்கா ஹொஸ்பிட்டல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சற்று முன்னர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திட்டமிடப்பட்ட போலி பிரச்சாரம் செய்த குற்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இம்மாதம்-30 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.