கல் மண் ஏற்றிச் செல்ல அனுமதிப் பத்திரம் வழங்கும் முறைமை ரத்து.

மணல், கல் மற்றும் மண் என்பவற்றை எடுத்துச் செல்வதற்கு நடைமுறையில் இருந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் முறைமையை நீக்கிவிடுவதற்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில்  நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையினால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

மணல், கல் மற்றும் மண் என்பன அகழ்வு செய்யும் இடங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சுற்றாடல் அமைச்சின் உதவியுடன் குழுக்கள் அமைக்கப்படவும் இன்றைய அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -