இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடத்தும் சமய சக வாழ்வு நிகழ்சி திட்டம் இன்று (30) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன் தலைமையில் நாவிதன்வெளி கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே ஜெகதீசன் அவர்களும் சகல மத தலைவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் சகல சமய அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் அறநெறி கீதம் இடம் பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் கலாசார உத்தியோகர்தர்கள்,அறநெறி பாடசலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.