சமூக சிற்பிகள் நிறுவனத்தின் சோனக தெரு பிரதேச இளைஞர் குழுவினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தாங்கள் அறிந்ததே. அந்த வகையில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நிலைமாறுகால நீதி தொடர்பான விசேட விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நிலைமாறுகால நீதி தொடர்பான சட்ட விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் மேற்படி சட்டங்களை எவ்வாறு பயன்படுத்துவது? அதை பரீட்சிக்கும் பொழுது ஏற்படும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது? அதன் நன்மைகள் யாவை? என்பவற்றை கிராம மட்டம் வரை கொண்டு செல்லும் சமூக சிற்பிகள் நிறுவனத்தின் வேலைத்திட்டங்களில் ஓர் அம்சமாக பொதுமக்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், முதியோர் சங்க பிரதிநிதிகள், இளைஞர் கழக பிரதிநிதிகள், மதத்தலங்களின் நிர்வாகசபை பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் கலந்து பயன் அடைந்து கொள்ளுமாறு அனைவருக்கும் இத்தால் பகிரங்க அழைப்பு விடுகின்றோம்.
காலம் :- 2019.12.08 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் :- மாலை 4.00 மணி முதல்
இடம் :- யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடம்நன்றி.
தொடர்புகளுக்கு :- செல்வன் என்.எம். அப்துல்லா - 077 3454190
ஏற்பாடு
சோனக தெரு இளம் சமூக சிற்பிகள் குழு – சமூக சிற்பிகள் நிறுவனம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -