தமிழ் மக்களுக்கான தலைவர் நான் தான் -நித்தியானந்தா

 பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, 2013ஆம் ஆண்டு தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவர்கள் பெங்களூரில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 இந்த செய்தி அறிந்து அதிர்ச்சியான ஷர்மா, தனது மகளை பார்க்க அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரை மகள்களை பார்க்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 
இது குறித்து காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்பு தொடர் புகார் வந்து கொண்டிருப்பதால் ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூட குஜராத் அரசு உத்திரவிட்டது. இந்த நிலையில் தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், முன்பெல்லாம் நாட்டில் ஏதாவது பெரும் பிரச்சினை ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை திசை திருப்ப என்னை பற்றிய பிரச்சினைகளை பேசி திசை திருப்புவார்கள். இப்போதெல்லாம் எனது செய்தி போக மீத இருக்கும் நேரத்தில் தான் மற்ற செய்திகளே போகின்றன.மேலும் நான்கு பேர் நான்கு விதமாய் பேசினால் அது நாடு. நான்கு பேர் நான்கு விதமாய் என்னைப்பற்றி பேசினால் அது தமிழ்நாடு. 
எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறேன் என்பதற்காக வடிவேலு காமெடியில் வருவது போல வைத்து செய்கிறார்கள். ஆனால் எவ்வளவு தடைகள் வந்தாலும் என் ஆன்மீக கடமைகளை நான் செய்து கொண்டே இருப்பேன். இதனால் தான் தமிழர்கள் என்னை தங்கள் ஆன்மீக தலைவராகவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -