அல் ஜிப்ரா,கணணி, இபுனு ஸீனா வைத்தியதுறை எ பல கண்டு பிடிப்புகளை நிகழ்த்திர்களும் இதே தாடி ஜுப்பா கலாச்சாரத்தவர்களே.இஸ்லாமி கல்வி ஒரு வட்டத்துக்குள் வந்தது அல்ல.மதரஸா கல்வி ஸ்தாபங்கள் 50/50 பாடவிதானங்களை மாற்ற வேண்டும்.உலகளாவிய வாழ்வியல் சார்ந்ததாக தகவல் தொழில்நுற்பம்,வங்கித்துறை,நிதிதத்துறை,கட்டிடக்கலை,விஞ்ஞானத்துறை என எதிர்கால திசையை நோக்கியதாக வழிநடாத்தப்படல் வேண்டும்.
அடுத்ததாக உஉரையாடலின் ஊடகம் மொழி ஆகும்.மொழி அறிவு சரியாக இல்லாவிடில் கல்வியை ஒழுங்காக கற்க முடியாது.தொடர்பாடலின் முதுகெழும்பு மொழி.நமது மதரஸாக்களில் கற்கும் மாணவர்களுக்கு மொழியை கற்பதற்கான வளங்கள் இல்லை என்தே நிதர்சனம்.
குத்பா பிரசங்கங்கள் பலவற்றில் மொழியை எவ்வாறு பயன்டுத்துவது என்பதுதெரியாமல் இருக்கிறார்கள்.இதனால் அந்நிய இனத்தவர்கள் உள்ளே ஏதோ சண்டை நடக்கிறதோ என தப்பாக எண்ணுமளவுக்கு சத்தமாக பிரசங்கங்கள் இடம்பெறுகின்றன.மொழியறிவு குறைவாயின் சத்தம் அப்படித்தான் வரும்.
நமக்குள் பேச மொழியாற்றல் இல்லையெனில் மொழியை எப்படி கற்பது?இஸ்லாம் உலக இறுதி வரை மானிடவாழ்க்கையை கொண்டு செல்ல யாவற்றையும் தந்திருக்கிது.நாம் கைவிட்டுவிட்டு ன்று கை சேதப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
அடுத்தது அங்கீகாரம்!
இன்று பிற மதத்தவர்களும் இஸ்லாத்தை கற்கிறார்கள்.இந்த கற்கைநெறிகள் உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் வழங்குமளவுக்கு வலிமை வாய்ந்ததா? இதன் தராதரத்தை தீர் மானிப்பது யார்?
உயர்கல்வியை இன்று படிக்கும் மாணவன் வெளிநாடு செல்வதாயின் "டோபல்" போன்ற அடிப்படை பரீட்சைகள் பாஸாகி இருக்க வேண்டும்.உலகளாவிய பரீட்சை முறைமையிற்குள் எமது சான்றிதள்கள் உள்வாங்ப்பட்டுள்ளனவா? ஜாமியா நளீமியாவைத்தவிர. ஏனையவை பல்கழைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் சான்றுப்படுத்தப்படும் முறைமைக்குள் உற்படுத்தப்பவில்லை. உலகளாவியரீதியில்,
சர்வதேச ரீதியான ஒரு அமைப்பு எது கற்கை நெறிகளை தரநிர்ணயம் செய்ய அமைய வேண்டும்.ஆகவே இஸ்லாமிய கல்விநிறுவனங்களை வழிநடாத்தும் கல்வி நிறுவனங்கள் இதை சிந்திக்க் வேண்டும்.இதனால் பலர் வேலையற்றவர்களாக எம்மத்தியில் அரசுக்கும் பாரமாக இருக்கின்றனர்.ஆளுமை இருந்தாலும் சிந்தனை தடையாக இருக்கிது.இந்த சவால்களை வெல்ல சமயோசிதமாக செயலாற்ற அனைவரும் முன் வேண்டும்..என்று ஜனாப் ஏ.எல்.லாபீர் கூறினார்.
கொழும்பு 10 அல்ஹிதாயாவித்தியாலயத்தில் நேற்று(15) ஆய்வுக்கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது.இஸ்லாமிய கற்கை துறையில் உயர்கல்வி அவசியம் என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், இஸ்லாமி கற்கைதுறையில், மாணவர்கள் எதிர்நோக்கும் தேவைப்பாடுகள், சவால்கள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வின் தலைமையுரையினை அஷ்ஷெய்க் அப்துல் நாசர் நிகழ்த்தினார்.இதனைத்தொடர்ந்து "தேவைப்பாடுகள்" என் தொனிப்பொருளில் அறிஞர் சித்திலெப்பை மன்ற தலைவர்-சட்டத்தரணி எஸ்.எம்.என்.எஸ்.ஏ.மர்ஸூம் மௌலானா உரை நிகழ்த்தினார்.மேலும் "எதிர்கால சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது" என்ற தலைப்பில் சட்டத்தரணியும் ஜோர்த்தானுக்கான முன்னால் இலங்கை முன்னால் தூதுவருமான ஏ.எல். லாபிர் அவர்கள் ,பல முக்கிய விடயங்களை கருத்துரைத்தார்.
விஸ்டம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கை ,.எம்.மர்வான்மௌலவி மற்றும் எ.பாஹிர் மௌலவி ,ஆசிரியர் எம்.அஸீஸ் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.
இறுதியாக இடம்பெற்ற கருதத்தாடலில், பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன, என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.