முஸ்லிம்கள் அச்சம் கொள்ளும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்படுவதை தவிர்க்குக!


கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்
முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளும் வகையில் கடந்த காலங்களைப் போன்;றே தற்போதும் அமைச்சர்கள் சிலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இத் தகைய கருத்துகள் இன நல்லிணக்கத்துக்குப் பெரும் தீங்கை ஏற்படுத்தும் இது தொடர்பில் ஆட்சிஅதிகாரத்திலுள்ள தலைமைகள் கவனம் கொள்ள வேண்டியது அவசியமானது எனத் தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸிர் அஹமட்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பத்தா யிரத்துக்கும் அதி;கமான மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி வைத்த பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த காலங்களைபோன்று அமைச்சர் விமல் வீரவன்ஸ இனவாத கருத்துகளையே முன் வைத்து வருகின்றார், 'இந்தியாவில் மோடியின் அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லை. அதேபோன்றதொரு ஆட்சியே இலங்கையிலும் நடைபெறும் என்றும் 'இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ளனர். ஆனாலும் மோடியின் அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லை. ஆனாலும் அனைவருக்கும் ஏற்றவகையில் சட்டத்திட்டங்கள் கொண்டுவரப்பட்ட நடைமுறைப்படுத்தப்படுகின்றன' எனவும் கூறியுள்ளார்.

இத்தகைய கூற்றுகள் மறைமுகமாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்துபவையாகவே உள்ளன. எனவே இது விடயத்தில் இவர்களது அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ் லிம் எம்.பிகள் கவனம் கொள்ளவேண்டும். இது தொடர்பில் தமது தலைமைகளின் கவனத்துக் கொண்டு சென்று இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளரார்கள் தனியான ஒரு முஸ்லிம் வேட்பாளர் போட்டியிட்டுபோதும் அவருக்கு தமது முழுமையான ஆதரவை அவர்கள் வழங்கவில்லை. இந்த யதார்த் தத்தை சிங்கள தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய அரசியலில் சமத்துவமிக்க அதிகாரப் பங்கிட்டு அரசியல் தோற்றம் பெற வேண்டும் என்ற சிந்தனையின் பிரகாரமாகவே முஸ்லிம் மக்கள் தமது வாக்குரிமை பயன்படுத்தி வந்தனர் வருகின்றனர்.

நாட்டில் வாழும் சமூகங்களின் மத்தியில் சமத்துவ சிந்தனையையும் நல்லிணக்கத் தையும் தோற்றம் பெறசெய்யாது. இத்தகைய சர்வாதிகார போக்கு கொண்ட கருத் துகளை முன்வைப்பது ஒருபோதும் காத்திரமான அரசியல் கலாசாரம் ஏற்பட வழி வகுக்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொண்டு அனைத்து சமூக மக்க ளின் உணர்வுகளையும் மதித்து செயற்பட முன்வரவேண்டும் - என்றார்.







.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -