நிலாம்டீன் கட்டுரை-
தற்போது புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மிக மிக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றது குறிப்பாக அசாம் திரிபுரா மணிப்பூர் மேகாலயா போன்ற மாநிலங்களில் இதோடு சேர்ந்து தற்போது தனி நாட்டு கோரிக்கையையும் இந்த மாநிலங்கள் வலுவாக எழுப்பி வருகின்றன.
காரணம் அவர்கள் சர்வ சாதாரணமாக பர்மா வங்கதேசம் மற்றும் நேபாளத்துடன் தொடர்பில் இருப்பவர்கள் இவரது மூதாதையர்கள் அங்கேயும் இங்கேயும் மாறி மாறி இருக்கக்கூடிய சூழல் பூகோள ரீதியாகவே இவர்கள் இந்த நாடுகளுடன் ஒன்றி இருக்கின்றனர்
தற்போது அங்கு மிகப்பெரும் போராட்டங்களை நடத்துவது முஸ்லிம்கள் அல்ல இந்துக்கள் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்
மேலும் பங்களாதேஷில் இருந்து முஸ்லிம்களை நாங்கள் தடுக்கின்றோம் என்பது போன்ற பொய்யான காரணங்கள் கூறப்படுகின்றது இதுகுறித்து பங்களாதேசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார் எங்களது நாட்டு மக்கள் இந்தியாவிற்குச் சென்று பிழைக்கும் நிலையில் இல்லை அது போன்ற ஒரு நிலை வந்தால் எங்கள் மக்கள் கடலில் குதித்து சாவுவார்களே தவிர இந்தியாவிற்கு செல்ல மாட்டார்கள் என்று காட்டமாக கூறியுள்ளா
ர்
எனவே தேன்கூட்டில் கை வைத்த கதையாக தேவையற்ற இந்த மசோதாவை நிறைவேற்ற துடிக்கின்றது மத்திய பாஜக அரசு
இதன் முக்கிய காரணம் தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இந்தநாட்டில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமம் என்ற சூழல் நிலவி வருகின்றது இது இந்தியா முழுவதும் இன்று இருக்கக்கூடிய சூழல். இதை திசை திருப்பவே இதுபோன்ற சட்டங்களை இயற்றுவதாக கூறி நாட்டை பதற்றத்தில் லேயே வைத்திருக்கின்றது பாஜக அரசு.
உண்மையிலேயே இந்த சட்டத்தின் மூலமாக அனைவரையும் சோதித்து அறிய பத்து வருடத்திற்கு மேல் ஆகும் என்கிறார்கள் அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த சட்டத்தை வைத்து எதையுமே செயல்படுத்த முடியாது.
நிச்சயமாக அடுத்த முறை பதவியில் இவர்கள் இருக்க போவதில்லை இருக்கும் வரை மக்களை மத ரீதியாக திசைதிருப்பி அதில் குளிர் காய்ந்து விட்டு போகலாம் என நினைக்கின்றார் அமித்ஷா.
இப்போது நாட்டை ஆள்வது மோடியா அல்லது அமித்ஷாவா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்திருக்கின்றது மேலும் இது எல்லாம் மிகவும் ஓல்டு ஸ்டைல் ஹிட்லர் அந்த காலத்திலேயே இதையெல்லாம் செய்து காட்டிவிட்டார்.