சாய்ந்தமருதுக்கு நகரசபை வேண்டுமாயின் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துங்கள்-இராஜாங்க அமைச்சர் விமலவீர

பாறுக் ஷிஹான்-

சாய்ந்தமருது நகர சபை இலக்கு மெய்ப்பட வேண்டுமாயின் எமது ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம் பெறுதல் வேண்டும் என
வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். வை.எம். ஹனீபா மற்றும் சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் அழைப்பின் பெயரில் சாய்ந்தமருது நகர சபை இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையில் புதன்கிழமை(25) மதியம் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். வை.எம். ஹனீபா தனது கருத்தில் கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடக்கம் இன்றுவரை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் பற்றி உரையாற்றினார்.

இதனை அடுத்து இம் மக்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம் பெறுதல் வேண்டும்.எதிர்வரும் புதிய ஆண்டில் ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் சந்திப்பு ஒன்றினை கொழும்பில் ஏற்படுத்தி எனவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு அறுதி பெரும்பான்மையை பெற்று கொடுக்க அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும்.என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய செயற்பாட்டாளர்களும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -