கிழக்கில் அதிபர் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் ஜனவரியில் இடமாற்றம்! வலயக்கல்விஅதிகாரிகளுக்கு நேர்முகப்பரீட்சை!


காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாணத்தில்; இடமாற்றத்திற்குத் தகுதியானவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

அதற்கான தெரிவுப்பட்டியல் வெளியிடப்பட்டு மேன்முறையீடு பெறப்பட்டு தற்போது மேன்முறையீட்டுக்கான இடமாற்றக்கூட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்வித்திணைக்களம் போன்றவற்றில் அதற்கான நடவடிக்கைகள் ஜருராக இடம்பெற்றுவருகின்றன. ஆசிரியர் மற்றும் அதிபர்களின் இடமாற்றத்திற்கான மேன்முறையீடுகள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கை கல்வி நிருவாகசேவைஅதிகாரிகளுக்கான இடமாற்றப்பட்டியல் ஏலவே கல்வியமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மேன்முறையீடுகள் (26) கிழக்கு கல்வியமைச்சில் பரிசீலனைக்குட்படுத்தப்படன.
இதேவேளை கிழக்கில் இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 1 ஜச்சேர்ந்த கல்விப்பணிப்பாளர்கள் இல்லாத 13வலயங்களுக்கான வலயக்கல்விப்பணிப்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப்பரீட்சை 27ஆம் திகதி மாகாண கல்வியமைச்சில் நடைபெறவுள்ளது.

நேர்முகப்பரீட்சையில் தெரிவாகும் புதிய வலயக்கல்விப்பணிப்பாளர்கள் எதிர்வரும் ஜனவரியில் புதிய வலயங்களில் நியமிக்கப்படுவார்கள். இந்த 13 வலயங்களுக்கும் முதலாந்தர அதிகாரிகள் இல்லாத பட்சத்தில் இரண்டாம்தர அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேன்முறையீட்டு இடமாற்றக்குழுவின் பரிசீலனையின் பின்னர் தெரிவாகும் மேற்படி அதிபர் ஆசிரியர் கல்வி அதிகாரிகளின் இடமாற்றப்பட்டியல் வெளியிடப்பட்டதும் ஜனவரி 2இல் அவர்கள் தத்தம் புதிய இடங்களுக்கு சென்று கடமைகளைப் பொறுப்பேற்பார்கள்.
நிராகரிக்கப்பட்டவர்கள் தத்தம் பழையஇடங்களுக்குச் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -