வரி குறைப்பால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு...

 ஐ. ஏ. காதிர் கான்-

பா
ண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை உடனடியாக 5 ரூபாவால் குறைக்குமாறு, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம், நாட்டிலுள்ள அனைத்து பேக்கரி உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் கேக்கின் விலையை 50 ரூபாவால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பாரியளவில் வரி வீதத்தை அரசாங்கம் குறைத்துள்ளதால், அதன் பிரதிபலன் மக்களுக்குச் சென்று சேரவேண்டுமென்ற அடிப்படையில், இக் கோரிக்கையை பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். ஜயரத்னவிடம் இது தொடர்பில் வினவிய போது, புதிய அரசாங்கம், வற் வரி உட்பட பல வரிகளை பாரிய அளவில் குறைத்துள்ளது. இதன் காரணமாக, சிறு உற்பத்தியாளர்கள் பாரிய நன்மையடைவர். 17 சத வீதமாக இருந்த வற் வரி 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10 இலட்சம் ரூபா வருமானம் பெறும் கம்பனிகளுக்கு விதிக்கப்பட்ட வரி நீக்கப்பட்டது. இதனால் 90 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள், இனிமேல் வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆகவே, இந்தப் பாரிய வரிச் சலுகையின் பிரதிபலன் மக்களுக்குச் சென்றுசேர வேண்டும். 

இதற்காகவே, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரிப் பொருட்களின் விலையை உடனடியாக 5 ரூபாவால் குறைக்குமாறு, பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளோம். 

கோதுமை மாவின் விலை குறைக்கப்படாமல் பாணின் விலையைக் குறைக்க முடியாது. விலைக் குறைப்பு தொடர்பில் பேக்கரிகளுக்கு அறிவித்துள்ளோம். ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் அனைவரும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -