தென்கிழக்கு பல்கலையில் கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு!!!

பல்கலைக்கழக ஊடக பிரிவு-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடம் ஏற்பாடு செய்திருந்த “ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மூலம் சமூகத்தை மேம்படுத்துதல்" எனும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச ஆய்வரங்கு 2019.12.18 ஆம் திகதி பீடத்தின் கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களது தலைமையில்,  சிரேஷ்ட்ட விரிவுரையாளரும் நிகழ்வின் இணைப்பாளருமான கலாநிதி எம்.ஜப்பார் அவர்களது பங்குபற்றுதலுடனும் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
குறித்த ஆய்வரங்குக்கு முன்னிலை பேச்சாளராக அமெரிக்காவின் சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொங்கலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இன்றய அமர்வுக்கு 166 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் 127 கட்டுரைகளே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படடன
நிகழ்வின் சிறப்பம்சமாக தொடக்க விழாவின் போது பல்கலைக்கழக பிரதான நூலகத்தின் மின் களஞ்சியத்தில் அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் பதிவேற்றப்படடன.
இன்றய ஆரம்ப அமர்வுக்கு நூலகர் பீடாதிபதிகள் துறைகளின் தலைவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் கட்டுரை சமர்ப்பித்தோர் நிருவாக அலுவலர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -