மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர் ஆலத்திற்கு திகாம்பரம் விஜயம்....
மலைநாட்டு நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 9000,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புணரமைப்பு செய்யப்பட்ட மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் தேவஸ்தானத்தின் கூரை வேலைத்திட்டம் நேற்றைய தினம் 08/12/2019 ஆலய பரிபாலன சபையினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதன் போது ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய பரிபாலன சபையினர் முன்னாள் அமைச்சர் பழநி திகாம்பரம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
தொ.தே.சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கௌரவ கணபதி நகுலேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற
இந்த நிகழ்வில் தொ.தே.சங்கத்தின் பிரதி தலைவர் கௌரவ.ம.உதயகுமார்,
தொ.தே.சங்கத்தின் பொதுச் செயலாளர் செ.பிலிப்,
தொ.தே.சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளர் சோ.ஸ்ரீதரன்,தொ.தே.முன்னணியின் உப தலைவர் மு.ராம்,தொ.தே.சங்கத்தின் நிர்வாகபணிப்பாளர் அ.நந்தகுமார் இளைஞர் அணி தலைவர் பா.சிவனேசன், உப தலைவர் திரு.ரட்ணசாமி,
மாவட்ட இயக்குனர் திரு.வீராசாமி மற்றும் தோட்ட தலைவர்கள்,தலைவிகள்,இளைஞர்,
யுவதிகள்,நகர வர்த்தகர்கள்,என பலர் கலந்துக்கொண்டனர்.