க‌ல்முனை ந‌க‌ர‌ அபிவிருத்தியை முன்னெடுக்க உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் வேண்டுகோள்


2014ம் ஆண்டு அன்றைய‌ பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வால் வ‌ர்த்த‌மாணி மூல‌ம் வெளியிட‌ப்ப‌ட்ட க‌ல்முனை ந‌க‌ர‌ அபிவிருத்தி ஐ தே க‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் அர‌சின் பொடுபோக்கு கார‌ண‌மாக‌ செய‌ல்ப‌டுத்தாம‌ல் விட‌ப்ப‌ட்ட‌தை மீண்டும் தொட‌ரும்ப‌டி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி, கௌர‌வ‌ பெசில் ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் நேர‌டியாக‌ தொலைபேசி மூல‌ம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ப‌ற்றி தெரிய‌வ‌ருவ‌தாவ‌து, 23.06.2014ம் ஆண்டைய‌ 1868/8 இல‌க்க‌ வ‌ர்த்த‌மாணி அறிவித்த‌ல் மூல‌ம் க‌ல்முனை மாந‌க‌ர‌ அபிவிருத்திக்கு அப்போதைய‌ பாதுகாப்பு அமைச்ச‌ராக‌வும் ந‌க‌ர‌ அபிவிருத்தி அமைச்ச‌ராக‌வும் இருந்த‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ க‌ட்ட‌ளை இட்டிருந்தார். ஆனாலும் இத்திட்ட‌த்தை முன்னெடுத்தால் இது ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கு வ‌ர‌லாற்றிலான‌ பொன்னெழுத்துக்க‌ளால் க‌ல்முனையில் பொறிக்க‌ப்ப‌டும் என்ப‌தை உண‌ர்ந்த‌ ஐ தே வின் புரோக்க‌ரான‌ ர‌வூப் ஹ‌க்கீமும் ஹ‌ரீசும் இது விட‌ய‌த்தை முன்னெடுக்காம‌ல் கை விட்டு விட்ட‌ன‌ர்.
மேற்ப‌டி வ‌ர்த்த‌மாணி வெளியிட‌ப்ப‌ட்டு மூன்று மாத‌ங்க‌ளில் ஜ‌னாதிப‌தி தேர்த‌ல் அறிவிக்க‌ப்ப‌ட்டு முஸ்லிம் காங்கிர‌சின் துரோக‌த்த‌ன‌த்தால் க‌ல்முனையில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டார். க‌ல்முனை மாந‌க‌ர‌ அபிவிருத்தியை முன்னெடுக்க‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கு க‌ல்முனை ம‌க்க‌ள் வாக்க‌ளிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி த‌னித்து நின்று பிர‌ச்சார‌ம் செய்த‌ போதும் க‌ல்முனை ம‌க்க‌ள் கேட்க‌வில்லை.
2015 தேர்த‌லில் ஐ தே க‌ கொண்டு வ‌ந்த‌ ந‌ல்லாட்சியில் அதே ந‌க‌ர‌ அபிவிருத்தி அமைச்ச‌ராக‌ இருந்த‌ ர‌வூப் ஹ‌க்கீம் இத‌னை தொட‌ர்ந்தும் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்காம‌ல் க‌ல்முனை ம‌க்க‌ளை ஏமாற்றினார். இது விட‌ய‌த்தை சாக்கு போக்கு சொல்லி கை விட்டார்.

த‌ற்போது ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அர‌சு வ‌ந்துள்ள‌தால் மேற்ப‌டி வ‌ர்த்த‌மாணியை புதுப்பித்து, புதிய‌தொரு குழுவை நிய‌மித்து க‌ல்முனை ந‌க‌ர‌ அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் கௌர‌வ‌ பெசில் ராஜ‌ப‌க்ச‌விட‌ம் நேர‌டியாக‌ கேட்டுக்கொண்டுள்ளார்.
க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் க‌ல்முனை ம‌க்க‌ள் பெருவாரியாக‌ கோட்டாவுக்கு வாக்க‌ளிக்காத‌ போதும் சுமார் ஏழாயிர‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ ம‌க்கள் கோட்டாவுக்கு வாக்க‌ளித்து வெற்றியின் ப‌ங்காள‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். முஸ்லிம் க‌ட்சிக‌ளால் பாரிய‌ பொய்க‌ளையும் அபாண்ட‌ங்க‌ளையும், அச்ச‌த்தையும் வெளிப்ப‌டுத்திய‌ நிலையில் உல‌மா க‌ட்சியின் க‌டுமையான‌ பிர‌சார‌ம் கார‌ண‌மாக‌ கோட்டா , ம‌ஹிந்த‌ மீது கொண்ட‌ ந‌ம்பிக்கையால் வாக்க‌ளித்த‌ இம்ம‌க்க‌ளுக்காக‌ இந்த‌ அபிவிருத்தியை மீண்டும் மேற்கொள்ளும்ப‌டி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -