அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய விஷேட செயற்திட்டமான 'பொதுமக்கள் பார்வைக்கு படும் பொது சுவர்களை அழகுற வர்ண மையப்படுத்தி பேசும் சுவர்களாக மாற்றும் நடவடிக்கைக்கு அமைவாக' காத்தான்குடி நகரசபையின் அறிவுறுத்தலுடன் இத்திட்டத்தை முஹாசபா வலையமைப்பு காத்தான்குடியில் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை (13) ஆரம்பித்துள்ளது.
இளைஞர்களின் நேரத்தை பயனுள்ள விதமாக மாற்றுவதுடன் அவர்களின் சிந்தனைகளை சித்திரமாக்கும் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்றுவருகிறது.
விளம்பரங்கள், போஸ்டர்கள் ஓட்டப்பட்டு அசுத்தமான நிலையில் உள்ள சுவர்களை சுத்தம் செய்து அதில் விழிப்புணர்வு சித்திரங்களை வரையும் திட்டத்தில் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் முஹாசபா வலையமைப்பு இளைஞர்கள் இன்று பிரதான வீதி போக்குவரத்து பஸ் நிலையத்தில் ஆரம்பித்து வைத்தனர்..
முன்மாதிரியான இச் செயற்பாட்டில் இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.