நோர்வூட் நிவ்வெளி தோழிற்பயிற்சி நிலையத்தின் குடி பகுதியினை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸில் முறைபாடு.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் கீழ் இயங்கும் நோர்வூட் நிவ்வெளி தொழிற்பயிற்சி; நிலையத்தின் குடிநீர் பகுதியி (17) இரவு இனந்தெரியாதவர்களால் சேதப்படுத்தியுள்ளதாகவும் இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாகவும் அந்நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி சி.கே. பென்சிமன் தெரிவித்தார்.

குறித்த குடிநீர் பகுதி சேதமாக்கப்பட்டதன் காரணமாக இந்நிலையத்தில் பல்வேறு தொழிற் பயிற்;சியில் ஈடுபடும் சுமார் 150 மாணவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் கழிவறை செல்ல முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நீண்டகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியதுடன் அதனை பெருந்தோட்டத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே பெற்றுக்கொள்கின்றனர்.
குறித்த நிலையத்திற்கு தோட்ட முகாமையாளருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே குடிநீர் பெற்றுக்கொடுத்துள்ளதாக நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எனும் கடந்த சில தினங்களாக இரவு வேளையில் இந்த நிலையத்திற்கு அருகாமையில் வீடுகட்டும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அனுமதியின்றி குறித்த நிலையத்தின் தண்ணீர் தாங்கியிலிருந்து தண்ணீர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் எனவே இதனை அறிந்து இனி இந்த தண்ணீர் தாங்கியிலிருந்து நீரினை பெற்றுக்கொள்வதனை தவிக்குமாறு உரியவர்களுக்கு தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் குறித்த நிலையத்திற்கு சமீமபமாக இந்த தனியார் வீட்டுக்கு தண்ணீர் பெற்றுக்கொள்வதற்கான தண்ணீர் தாங்கியும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இதில் கல்வி பயிலும் மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் 1995 மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந் நிலையம் குடிநீர் தட்டுப்பாட்டினை நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிற் பயிற்சி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கபட்டன,

எனினும் அடிக்கடி தண்ணீர் குழாய்களை உடைத்து விடுவதனால் நாங்கள் குடிபதற்கும் இதர தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறோம் அதிகமான மாணவர்கள் அதிக தூரத்திலிருந்து வந்து தான் கல்வி பயில்கிறார்கள்.இதில் அதிமாக பெண்களே காணப்படுகின்றனர்.

ஆகவே இவ்வாறு தண்ணீர் உடைக்கபட்டுள்ளதனால் அவர்களின் அத்திவசிய தேவைகளான குடிப்பதற்கும் கழிவறை பயன்பாடிற்கும் தண்ணீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் நிரந்த தீர்வு ஒன்றினை பெற்றுத்தர வேண்;டும் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -