கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவின் கீழுள்ள மீராவோடை மேற்கு தாருல் ஹுதா பாலர் பாடசாலையின் 31 வது மாணவர் விடுகை விழாவும் பாலர்களின் கலை நிகழ்வும் சனிக்கிழமை (7) மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எல்.சலாஹுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி கலந்துகொண்டதோடு கெளரவ அதிதிகளாக முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.அலியார் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.