கிழக்கின் புதிய ஆளுனருக்கு குவியும் வாழ்த்து செய்திகள்


கிழக்கு மாகாண ஆளுனராக கடமையை வியாழக்கிழமை காலை சுப நேரத்துக்கு பொறுப்பெடுக்கின்ற அனுராதா ஜஹம்பத்துக்கு வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இராணுவ முன்னாள் அதிகாரிகள் அல்லது நேரடியான அரசியல் பின்னணி உடைய முக்கியஸ்தர்கள்தான் கிழக்கு மாகாண ஆளுனர்களாக இது வரை காலமும் நியமனங்கள் பெற்று இருக்கின்றனர்.

இம்முறை மிக நீண்ட பரிசீலனைக்கு பிற்பாடு புத்திஜீவியும், சிறந்த நிர்வாகியும், பொதுநல செயற்பாட்டாளருமான அனுராதா ஜஹம்பத்தை கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ நியமித்து உள்ளார். அதுவும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுனர் என்கிற பெருமையும் இவருக்குதான் கிடைத்து உள்ளது.
இந்நிலையில் இவருக்கு வழங்கப்பட்டு உள்ள நியமனத்தை வரவேற்று அரசியல் செயற்பாட்டாளர்கள் மாத்திரம் அன்றி பொதுநல அமைப்புகளும் வாழ்த்து செய்திகளை விடுத்த வண்ணம் உள்ளன.
இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன் விடுத்த வாழ்த்து செய்தியில் அறிவு, ஆற்றல், நிர்வாக அனுபவம் மூன்றும் ஒருங்கு சேர அமைய பெற்ற நாட்டு பற்றாளரும், மக்கள் சேவையாளருமான அனுராதா அம்மையார் கிழக்கு மாகாண மக்கள் அனைவரினதும் மனங்களை வெல்கின்ற சிறந்த ஆளுனராக விளங்கி நிறைந்த சேவைகளை வழங்குவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.


ஜனசஹன ஸ்ரீலங்கா மனித நேய ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் துஷித தேசப்பிரிய விடுத்த வாழ்த்து செய்தியில் அனுராதா அம்மையார் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மக்கள் அனைவரையும் மனித நேயத்தால் ஒன்றிணைத்து அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் கூடிய சேவைகள் மூலம் கிழக்கு மாகாணத்தை குட்டி சிங்கப்பூராக கட்டியமைத்து தருவார் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழர் ஊடக மையத்தின் தலைவர் ரி. தர்மேந்திரா விடுத்த வாழ்த்து செய்தியில் கிழக்கின் புதிய விடியலுக்கான விடிவெள்ளியாகவே நாம் அனைவரும் அனுராதா அம்மையாரை பார்க்கின்றோம், மிக சிறந்த ஆளுமையான இவர் சவால்கள் நிறைந்த கால கட்டத்தில் ஆளுனராக நியமனம் பெற்று வந்திருக்கின்றார், இவர் கடந்த கால, நிகழ் கால பாதிப்புகளில் இருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டு புதிய பொற்காலத்தை உருவாக்கி தருவார் என்பதில் அதீத நம்பிக்கை உள்ளது என்றார்.

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாக பணிப்பாளர் யூ. கே. காலித்தீன் விடுத்த வாழ்த்து செய்தியில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை உயர்த்தி மேம்படுத்துகின்ற பணியில் அனுராதா அம்மையார் இதய சுத்தியுடன் ஈடுபடுவார் என்றார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரம், சிலோன் மீடியா போரம், இலக்கிய சூரியர்கள், தெற்காசிய சமூக அபிவிருத்தி ஸ்தாபனம் என்று இன்னோரன்ன அமைப்புகள் இவரை வாழ்த்தி உள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -