கல்முனைப்பிராந்தியத்தில் டெங்கு காசநோய் தொழுநோய் திவீரம்! பிராந்திய தொற்றுநோய்ப்பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர்ஆரிப் தகவல்.


காரைதீவு நிருபர் சகா-
ல்முனைப்பிராந்தியத்தில் அண்மைக்காலமாக டெங்குநோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடத்தில் 780பேருக்குமேல் டெங்கு தாக்கியுள்ளதாகவும் கல்முனைப்பிராந்திய தொற்றுநோய்ப்பிரிவுப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் நாகூர் ஆரிப் தெரிவித்தார்.

குறிப்பாக அக்கரைப்பற்று பொத்துவில் அட்டாளைச்சேனை போன்ற பிரிவுகளில் டெங்கு நோய்த்தாக்கம் கூடுதலாக இருப்பதாக கூறும் அவர் ஆனால் இதுவரை தெய்வாதீனமாக யாரும் உயிரிழக்கவில்லையெனவும் கூறினார்.
மழைக்குப்பின்னரான காலத்தில் டெங்குநோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதைவிட காசநோய்த்தாக்கமும் தொழுநோய்த்தாக்கமும் தற்போது அதிகரிக்கஆரம்பித்திருப்பதாகவும் கூறினார்.
தொழுநோய்தாக்கமிருப்பதாக சந்தேககிப்படுபவர்களுக்கு தோல்நோய் நிபுணரின் உதவி பெற்றுக்கொள்ளப்படுகிறது. அவர்களால் ஸ்கிறினிங் செய்யப்படுகிறது. இருந்தும் மாந்தீவு நீர்கொழும்பு வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் அதிதிவீர நோயாளிகள் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிராந்தியத்திற்கான எய்ட்ஸ் நோய்காக்கான பாலியல்நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையம் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் இயங்கிவருகிறது.சந்தேகமானவர்கள் அங்கு சோதனை செய்துகொள்ளலாம்.

சகல கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் நடாத்தப்படும் சோதனைகளில் எய்ட்ஸ் சோதனையும் நடாத்தப்பட்டுவருகிறது. சகல பொதுச்சுகாதாரசேவை பிரிவுகளிலும் இது நடாத்தப்பட்டுவருகிறது.
அதேவேளை பாடசாலை பொதுநிறுவனங்களில் சகலமட்டங்களிலும்மேற்படி நோயக்ளுக்கான விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -